பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 377

“அறிவாளிகள் ஒடுக்கப்பட ஒடுக்கப்பட அப்படி ஒடுக்கப்படும் சமூகத்தில் இப்படியெல்லாம்தான் நடக்கும் போலிருக்கிறது.”

“ஒரேயடியா நீ அப்படிச் சொல்லிவிட முடியாது. உன் வாதம் தவறானது. அறிவாளிகளிலும் நம் பூதலிங்கம் சார் இருக்கிறார். அவர் இன்னும் சமூக நியாயங்களுக் காகப் போராடுகிற குணமுடையவர்தான். ஆனால் போராடும் மார்க்கத்தையும் நியாயமானதாக எதிர் பார்க்கிறார். படிக்காதவர்களில் நம் அண்ணாச்சி இருக் கிறார். அவரும் சமூக நியாயங்களுக்காகப் போராடுகிற குணம் உடையவர்தான். ஆனால் போராட்ட மார்க்கத்தை யும் நியாயமானதாகத்தான் எதிர்பார்த்துப் போராடு கிறவர். இளைஞர்களில் நம் மணவாளன் அண்ணன் இருக்கிறார். அவரும் இலட்சியத்தை அடையத்துடிப்பதோடு அடையும் மார்க்கத்திலும் ஒரு நியாயத்தை எதிர் பார்க்கிறார்.”

“இந்தக் குமரப்பனே ரொம்ப நாளைக்கு முன்னேஇந்த ஊர்லே யூனிவர்ஸிடி வர்றதுக்கு முந்தி இங்கே காலேஜில் தமிழ் லெக்சரராக இருந்த சத்தியமூர்த்திங்கிற அவரோட சிநேகிதருடன் தான் இங்கே வந்தாராம். அப்ப இவர் அவ்வளவு தீவிரம் இல்லியாமே?”

“காலங்களுக்கும் சித்தாந்த மாறுதலுகளுக்கும் நிறையத் தொடர்பிருக்கிறது. பழம் கனிவதற்கும் அழுகுவதற்கும், வற்று வதற்கும் காலமே காரணம். அளவோடு நின்றால் கனிவு அளவு மீறினால் அழிவு. அழிவும் எல்லை மீறினால் வற்றுதல் என்று பல நிலைகள் இருக்கும்போது யார்தான் அந்த நிலையிலிருந்து தப்ப முடியும்?”

“அதாவது பழம் கனிவதற்குத் தேவையான காலம் கடந்து மேலும் விடப்படுகிற காலம் அழுகவும் அதற்கு மேலும் விடப்படுகிற காலம் வற்றவும் செய்யும் என்கிறீர்கள் இல்லையா?"