பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

378 சத்திய வெள்ளம்

“ஆம்! வற்றிய கனியில் மீண்டும் கணிவைக் கொண்டு வரமுடியுமா?” s

“கதிரேசன் மாறமாட்டான் என்கிறீர்கள் இல்லையா?” “அவன் ரொம்ப அவசரப்படுகிறான். இன்னும் அவன் மேலுள்ள அன்பையும் பிரியத்தையும்விட முடியாமல் நான் தவிக்கிறேன். அவனோ எல்லா அன்பையும், எல்லாப் பிரியத்தையும் வற்றச் செய்து கொண்டுவிட்டான்.”

“எங்கே அன்பு வற்றுகிறதோ, அங்கே வெறுப்பும் விரக்தியும் உடன் நிகழ்ச்சியாக உற்பத்தியாகின்றன. வெறுப்பில் அழிவுகள் கிளைக்கின்றன. அழிவுகளால் எதைத்தான் வளர்க்க முடியும்?” - அவள் கேட்டாள்.

“நீ நினைப்பதுபோல் எதையும் செய்ய முடியாதவன் என்று அவனைப் பற்றியோ அவன் சார்பைப் பற்றியோ நான் நினைக்கவில்லை. அவன் இனி எதைச் செய்ய முடியுமோ அதைப் பற்றியே நான் கவலைப்படுகிறேன்.” “அந்தக் கவலை அவருக்கு இல்லையே என்ன செய்யலாம்?”

இப்படி பாண்டியனும் கண்ணுக்கினியாளும் கவலைப் பட்டுப் பயப்பட்டதும், பதறியதும் எதற்காகவோ அது அடுத்த நாலைந்து தினங்களிலேயே அங்கே நடந்துவிட்டது.

முப்பத்து ஒன்றாவது அத்தியாயம்

வழக்கமாகப் பல்கலைக் கழக விடுதிகளுக்குத் தினசரிப் பத்திரிகைகளும், பிற சஞ்சிகைகளும் போட வரும் சைக்கிள் கடைப் பையனுக்குப் பதில் அன்று காலை அண்ணாச்சியே பத்திரிகை விநியோகிக்க வந்தவுடன் பாண்டியனுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏதாவது தலை போகிற காரியம் இருந்தாலொழிய அண்ணாச்சி பல்கலைக் கழக எல்லைக் குள் தாமே புறப்பட்டு வரமாட்டார் என்பது பாண்டிய னுக்குத் தெரியும். கையில் பிரித்த பத்திரிகையோடும் “கதிரேசன் மோசம் போயிட்டான் தம்பீ!” என்ற