பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

382 சத்திய வெள்ளம்

கொள்ளவில்லை என்றாலும் அண்ணாச்சிக்கு அவர் களைத் தெரிந்திருந்தது. கதிரேசன் அவருடைய கடைக்கு வருவது உண்டா என்றும், அவன் என்னென்னப் பத்திரி கைகள் வாசிப்பது வழக்கம் என்றும், எங்கெங்கே அவனு டைய நண்பர்கள் இருக்கிறார்கள் என்றும் அந்த இரகசியப் போலீஸார் விசாரித்தார்கள். அண்ணாச்சியிடம் அநுமதி பெற்ற பின் அவருடைய கடையின் உட்பகுதியிலும் புகுந்து சோதனையிட்டார்கள். கதிரேசன் சம்பந்தமான தடயம் எதுவும் அவர்களுக்கு அங்கே கிடைக்கவில்லை. சோதனைகளை முடித்துக் கொண்டு போவதற்கு முன் கதிரேசனும், பிச்சைமுத்துவும் மற்ற மாணவர்களும் தலை மறைவாகி இருக்கும் இடம் தெரிந்தால் சொல்லிவிடும்படி அண்ணாச்சியிடம் வற்புறுத்தினார்கள் அவர்கள்.

“எனக்குத் தெரியாதுங்க! நான் காந்தி பக்தன். அந்தத் தம்பி என் கடைக்கு வாரது போறதை நிறுத்தி ரொம்ப நாளாகுதுங்க. நான் சாமி சத்தியமா நெஜத்தைச் சொல் றேன்” என்றார் அண்ணாச்சி. அவர் சொல்லியதை நம்பி ஏற்றுக்கொண்டது போன்ற பாவனையில் போகத் தொடங்கியவர்கள் மறுபடி ஏதோ சந்தேகம் கொண்டாற் போல் திரும்பியும் வந்தார்கள். கேட்டார்கள்:

“பல்கலைக் கழக மாணவர்களுக்கு நீர் சிலம்பம் சுற்றச் சொல்லிக் கொடுக்கிற வழக்கம் உண்டா இல்லையா?” “உண்டுங்க! ஆனா எல்லா மாதத்திலேயும் இங்கே சிலம்பப் பள்ளிக்கூடம் நடக்காது. யூனிவர்ஸிடி திறந்ததும் ஒரு மாசம் ரெண்டுமாசம் நடக்கும். அப்பாலே மழை காலம் தொடங்கினால் அது நடக்காது. மறுபடி மார்ச் ஏப்ரல்லேதான் நடக்கும். அப்ப பரீட்சை சமயம் கிறதுனாலே பையன்க அதிகமா வரமாட்டாங்க. இந்தச் சிலம்பப்பள்ளிக் கூடத்தை நாங்க ஒரு ‘ஜிம்னாஸியம்’ மாதிரிதான் நடத்தறோமே தவிர, வேறொண்ணுமில்லே...”

“பல்கலைக் கழக மாணவர் யூனியன் காரியதரிசிக்கும் கதிரேசனுக்கும் சிநேகிதம் எப்படி?” -