பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

384 சத்திய வெள்ளம்

வைக்கப் போகிறானே என்றெண்ணிப் பயந்தார் அண்ணாச்சி, ஒரு தந்தையின் பாசத்தோடும் அக்கறையோடும் பாண்டி யனைப் பற்றிக் கவலைப்பட்டார் அவர் கதிரேசன் பல நாட்களுக்கு முன் ஒரு மாலை வேளையில் பிச்சைமுத்து தனக்குக் கொடுத்திருந்த சேகுவேராவின் வரலாறு, கொரில்லா இயக்கம் பற்றிய சில புத்தகங்கள் ஆகிய வற்றைத் தன் கடையில் வைத்துப் பாண்டியனிடம் கொடுத்து, “பாண்டியன்! இந்தப் புத்தகங்களை நீ அவசியம் படித்துப் பார்க்க வேண்டும்” என்று சொல்லி யதை இப்போது நினைத்தார் அண்ணாச்சி. அப்படிக் கதிரேசன் கொடுத்த புத்தகங்களில் எதையாவது பாண்டி யன் தன் அறையில் இன்னும் வைத்திருந்து அதன் காரண மாகப் போலீஸாரிடம் மாட்டிக் கொள்ள நேர்ந்துவிடப் போகிறதே என்று அண்ணாச்சியின் மனம் பதறியது. கடைப்பையன் மூலமாக முக்கியமான மாணவர்களையும் பாண்டியனையும் கண்ணுக்கினியாளையும் கடைக்கு வரவழைத்து எச்சரிப்பதற்காகச் சொல்லி அனுப்பினார் அவர். கதிரேசன் பாண்டியனிடம் பிச்சைமுத்துவின் புத்தகங்களைக் கொடுத்த தினத்தன்று அவனுக்கும் பாண்டியனுக்கும் நிகழ்ந்த உரையாடலைக்கூட மீண்டும் நினைவுகூர்ந்தார் அண்ணாச்சி. பாண்டியன் கதிரேசனிட மிருந்து புத்தகங்களை வாங்கிக் கொள்ளும்போது சொன்னான்: “எனக்கு உடன்பாடில்லாத நூல்களையும் நான் படிக்க முடியும். படிப்பதனாலேயே அவற்றை நான் ஏற்றுக்கொண்டு விடுவேன் என்று நீ நினைத்துக் கொண்டு விடாதே கதிரேசன்.”

“அதைப்பற்றி எனக்கு அக்கறையில்லை பாண்டியன்! சாத்வீகமும், காந்தியமும் இனி இந்த நாட்டுக்குப் பயன் படாத அளவு மூத்துத் தளர்ந்துவிட்டன.”

“அது உன் கருத்து. நான் அதை ஏற்கமாட்டேன். உண்மைக்கு என்றுமே மூப்பு இல்லை. உண்மை மூப்படை வதோ தளர்வதோ அழிவதோ கிடையாது. பொய்தான் மூப்படையும், தளரும், அழியும். உண்மையோ மூப்படைய