பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

388 சத்திய வெள்ளம்

தைக் கேட்க ஆரம்பித்தால் எல்லா ஆசிரியர்கள் வீட்டிலும் அப்புறம் போலீஸ் ரெய்ட் நடந்தாலும் நடக்கும்.”

“ஐ யாம் ஸாரி. நீங்கள் இதற்கு இப்படி வியாக்கி யானம் செய்ய ஆரம்பித்தால் நான் என்ன செய்ய முடியும்?” என்று கேட்டுவிட்டு மழுப்பலாக நாலு வார்த்தைகள் சொல்லி ஸ்டாஃப் கவுன்சில் கூட்டத்தையே முடித்துவிட்டார், துணைவேந்தர். பகல் மூன்றரை மணிக்கு ஸ்டாஃப் கவுன்சில் கூட்டம் முடிந்ததும், மாணவர் பிரதி நிதிகள், மாணவர் பேரவைத் தலைவன் மோகன்தாஸ், செயலாளன் பாண்டியன் முதலியவர்களைத் தம் அறைக் குக் கூப்பிட்டனுப்பினார் துணைவேந்தர். அப்போது துணைவேந்தரோடு மதுரையிலிருந்து வந்திருந்த டி.ஐ.ஜி., இரண்டு ரகசிய போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஆகியோரும் உடனிருந்தார்கள். பாண்டியன், மோகன்தாஸ் மற்ற மாணவர் பிரதிநிதிகள் எல்லோரும் உள்ளே வந்தவுடன் துணைவேந்தரே பாண்டியனையும் மோகன்தாஸையும் கேள்விகள் கேட்டார்.

போலீஸ் கதிரேசன் வீட்டில் கைப்பற்றிய அவனுடைய டைரியில் பல இடங்களில் உன் பெயரும், மோகன்தாஸ் பெயரும் குறிப்பிடப்பட்டிருக்கிறதாம், உங்களைக் கதிரேசன் அடிக்கடி சந்திப்பது உண்டென்றும் அந்த டைரியிலிருந்து தெரிகிறது என்கிறார்கள். அந்தத் தீவிரவாதிகளின் தலைவர் பிச்சைமுத்துவைக் கதிரேசன் முதலில் சந்திக்கும்படி செய்தது நீதானாமே?” என்று துணைவேந்தர் கேட்டார்.

“இன்று இரவு டைரி எழுதும்போது நான்கூட என் டைரியில் உங்களைச் சந்தித்ததாக எழுதுவேன் சார்! அதற்கு அர்த்தம் நீங்கள் செய்கிற காரியங்களுக்கெல்லாம் நான் பொறுப்பு என்றோ, நான் செய்கிற காரியங்களுக்கு எல்லாம் நீங்கள் பொறுப்பு என்றோ ஆகி விடாதே? நிலக்கோட்டைக்கு நாங்கள் கதிரேசனை அனுப்பும்போது பிச்சைமுத்துவைச் சந்திக்க என்று அனுப்பவில்லை.