பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 391

“என் அறையிலேகூட வந்து பார்த்தாங்க” என்றாள் கண்ணுக்கினியாள். அப்போது ஒர் ஆள் பரபரப்பாக ஓடி வந்து, “அண்ணாச்சி! கதிரேசனையும் மற்ற ரெண்டு பையன்களையும் கண்டுபிடிச்சு அரெஸ்ட் பண்ணிட் டாங்க. பிச்சைமுத்து வாத்தியார் மட்டும் அகப்படலியாம். இந்தத் தெருக் கோடியிலே இருந்த மரக் கடையிலேதான் ஒளிஞ்சிக்கிட்டிருந்திருக்காங்க” என்றான்.

இப்படி அவன் கூறிய சிறிது நேரத்துக்கெல்லாம் போலீஸார் துப்பாக்கி ஏந்தி இருமருங்கும் வர விலங்கு பூட்டியக் கரங்களுடன் கதிரேசன் முதலிய மாணவர்கள் மூவரையும் அதே பாதையாக ஸ்டேஷனுக்கு நடத்திச் சென்றார்கள். கதிரேசனை அந்தக் கோலத்தில் பார்த்ததும் பாண்டியனுக்குக் கண் கலங்கியது. வீணாகச் சீரழிந்து விட்டான்’ என்று பாண்டியன் அநுதாபத்தோடு கூறிய வாக்கியம் கண்ணுக்கினியாளுக்குக் கேட்டது.

முப்பத்து இரண்டாவது அத்தியாயம்

அப்போது ஆண்டு கொண்டிருந்த மல்லை இராவண சாமியின் கட்சிக்காரர்கள் தங்களுக்கு வேண்டாதவர்களை ஒடுக்கவும் மிரட்டவுமே போலீஸைப் பயன்படுத்தி வந்தார்கள் என்பது ஊரறிந்த பகிரங்க உண்மையாகி யிருந்தது. எஸ்டேட் அதிபரைத் தீவிரவாதிகள் கொலை செய்ததை ஒட்டி மதுரையில் மணவாளனின் வீடு, கண்ணுக்கினியாளின் தந்தை குடியிருந்த சித்திரக்காரத் தெரு வீடு, பாண்டியனின் பாலவநத்தம் கிராமத்து வீடு எல்லாவற்றையுமே சோதனை என்ற பெயரில் போலீஸார் துன்புறுத்தி அலைக்கழித்தார்கள், கதிரேசன் முதலிய மாணவர்களுக்கும்,. அவர்களுடைய தலைவர் பிச்சை முத்துவுக்கும், இந்த வீடுகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றாலும் ஏதாவது தொல்லை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே இந்தச் சோதனைகள் நடத்தப்