பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/394

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

392 சத்திய வெள்ளம்

பட்டன. இந்தச் சோதனையினால் ஏற்பட்ட தொல்லை கள் பற்றிப் பாண்டியனின் தந்தையிடமிருந்து அவனுக்கும், கண்ணுக்கினியாளின் தந்தையிடமிருந்து அவளுக்கும், மணவாளனிடமிருந்து அண்ணாச்சிக்கும் கடிதங்கள் வந்திருந்தன. கதிரேசன் முதலிய மாணவர்கள் போலீஸா ரிடம் பிடிபட்ட பத்துப் பதினைந்து நாட்களுக்குப் பின் மல்லிகைப் பந்தலுக்கும் நிலக்கோட்டைக்கும் நடுவே உள்ள மலைசார்ந்த காடுகளின் அடர்ந்த பகுதி ஒன்றில் பிச்சைமுத்துவையும் தேடிப்பிடித்துக் கைது செய்து விட்டார்கள். போலீசார் சோதனையிட்டுக் கைப்பற்றிய பிச்சைமுத்து, கதிரேசன் ஆகியோரின் டைரிகளிலிருந்தும், வேறு ரகசியக் குறிப்புகளிலிருந்தும் அவர்கள் அந்த எஸ்டேட் அதிபரைக் கொலை செய்வதற்குப் பல நாட்களாகத் திட்டமிட்டிருப்பது தெரிய வந்தது. நல்ல வேளையாகக் கதிரேசனும் பிச்சைமுத்துவும் தங்கள் கையெழுத்துக்களாலேயே தத்தம் டைரிகளில் மணவாளன், பாண்டியன் முதலியவர்களைப் பற்றி இந்தக் கொலைக்குத் திட்டமிடுவதற்கு முன்பே மனசாட்சிக்குத் துரோகம் செய்பவர்கள் (கான்ஷியன்ஸ் பெட்ரேயர்ஸ்) என்று குறை சொல்லி வருணித்திருந்ததால் இவர்கள் தப்ப முடிந்தது. பாண்டியன், மணவாளன் முதலியவர்களும், கதிரேசன், பிச்சைமுத்து முதலியவர்களும், கருத்து வேறுபட்டவர்கள் என்பதை இந்த டைரிக் குறிப்பு நிரூபித்து விட்டது. இல்லை என்றால் போலீஸார் மாணவாளன், பாண்டியன் முதலியவர்களுக்கு மேலும் தொல்லை கொடுத்திருக்கக் கூடும் என்று தெரிந்தது. பாண்டியன் முதலியவர்கள் தப்பிவிட்டாலும் கதிரேசன், பிச்சைமுத்து ஆகியவர் களோடு நள்ளிரவுக் கூட்டங்களில் கலந்து கொண்ட சில பொறியியல் மாணவர்களையும், சில வேளாண்மைப் பட்டப்பிரிவு மாணவர்களையும் போலீஸார் பிடித்து விட்டனர். வார்டன்கள் விடுதிக் காவலர்கள், டீன்கள் எல்லாருக்கும் மாணவர்களை அதிகமாகக் கண்காணிக்கக் கோரும் இரகசியச் சுற்றறிக்கைகள் துணைவேந்தரால்