பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 395

பெரும்பான்மை சிறுபான்மையால் மனிதர்களே நிர்ணயிக்கிறார்கள் குற்றம் நிரூபிக்கப்பட்ட நிரபராதிகள் விசாரணைக்குப் போகிறார்கள் நிரூபிக்கப்படாத குற்றவாளிகள் தொடமுடியாத உயரத்தின்மேல் பதவிகளிலே இருக்கிறார்கள் சாட்சியில்லாத உண்மைகளைப் பொய்களாகச் சித்திரிக்கிறார்கள் சாட்சியுள்ள பொய்களையே உண்மைகளாகக் காட்டுகிறார்கள் ஆம். இருபதாம் நூற்றாண்டின் பாவ புண்ணியங்களைப் பெரும்பான்மை சிறுபான்மையால் மனிதர்களே நிர்ணயித்து விடுகிறார்கள்!” என்று சொல்லி வேதனைப்பட வேண்டியதுதான். கொலையுண்ட எஸ்டேட் அதிபர் உயிரோடிருந்தபோது தாம் சிக்காதபடி தந்திரமாக எத்தனையோ கொலை, கொள்ளை, கற்பழிப்புக்களை செய்திருக்கிறார். ஆனால் அவர் சட்டத்தின் பார்வையில் படவில்லை. இன்று அவரைக் கொன்றிருப்பவர்களோ சட்டத்தின் பார்வை யில் வசமாகச் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். சட்டம் அவர்களை விடாது.” સ્વ.

“கதிரேசனை நினைத்தால்தான் மனத்துக்கு மிகவும் வேதனையாயிருக்கிறது.”

“கதிரேசன் மட்டுமில்லை; வடிவேல், மலையாண்டி, பிச்சைமுத்து சார், எல்லோருமே கோபக்காரர்களான நல்லவர்கள்தாம். ஆனால் நல்லவர்களின் ஆத்திரம்கூடச் சட்டத்தால் மன்னிக்கப்படுவதில்லையே? இங்கேதான் இலட்சியத்தை அடையும் மார்க்கத்தைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியிருக்கிறது ! கதிரேசன் முதலிய வர்கள் அதைப் பற்றி நினைக்கவே இல்லை.” இப்படிச் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தபின் அவளிடம் விடை பெற்றான் பண்டியன். மற்ற மாணவர்களும் அவனும்