பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/398

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

396 சத்திய வெள்ளம்

வேறுவேறு விடுதிகளுக்குப் போய் ஏற்கெனவே உறுதி கூறியிருந்த சாட்சிகளைச் சந்தித்துச் சொல்லிவிட்டு வந்தனர். சில சாட்சிகள் தளர்ந்திருப்பது அவர்களுக்கே புரிந்தது. வேறு சில சாட்சிகள் அவர்கள் தேடிப் போன போது கிடைக்கவில்லை. அவர்களைப் பற்றிச் சந்தேகமா யிருந்தது.

போராட்டங்களும், விடுமுறைகளும் அதிகமாகி வேலை நாட்களைக் கணிசமாகக் குறைத்திருந்ததனால் பல்கலைக்கழகத்தின் ‘ஸெகண்ட் டேர்ம் இரண்டாவது பகுதி டிசம்பரில் முடிந்து கிறிஸ்துமஸ் பொங்கல் விடுமுறை வந்தபோது பத்துப் பன்னிரண்டு நாட்களே பல்கலைக்கழகம் மூடப்பட்டது. அந்த விடுமுறையில்தான் அகில இந்தியப் பல்கலைக்கழகத் தேசிய மாணவர் சம்மேளன மகாநாட்டை மல்லிகைப் பந்தலில் நடத்தத் திட்டமிட்டிருந்தார் மணவாளன். முதலில் பட்டமளிப்பு விழா முடிந்ததும் இந்த மாநாட்டை நடத்தத் திட்ட மிட்டிருந்த அவர் பட்டமளிப்பு விழா இரண்டு மூன்று முறை ஒத்திப் போடப்பட்டதனால் இப்போது மகாநாட்டை முதலில் நடத்திவிட முடிவு செய்து கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு முன்பாகவே மல்லிகைப் பந்தலில் வந்து தங்கிவிட்டார். ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு ரெஸிடென்ஷியல் பல்கலைக்கழகத்தை யொட்டி நடந்த அந்த மகாநாடு முந்திய ஆண்டின் இறுதியில் மணவாளனின் கடைசி வருடப் படிப்பின்போதே, அவர் மல்லிகைப் பந்தலில் நடத்தியிருக்க வேண்டியது. படிப்பின் இறுதி ஆண்டில் ஏற்பாடுகளையும், வசூலையும் கவனிக்க முடியாமல் தட்டிப் போயிருந்ததை இப்போது பாண்டியன் முதலிய மாணவர்களின் துணையோடும் ஒத்துழைப் போடும் சிறப்பாக நடத்திவிட விரும்பினார் மணவாளன். கதிரேசன் முதலியவர்களின் செயலால் தேசிய மாணவர் களின் எதிரிகளும், மல்லை இராவணசாமியின் கட்சிக் காரர்களும் மாணவர்களையும் அவர்கள் இயக்கங் களையும் பற்றிக் கொலை வெறி இயக்கம்’ என்பதுபோல்