பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/401

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 399

இடத்தில் யார் அனுமதியின் பேரில் பந்தல் போட் டீர்கள்? பந்தலை உடனே பிரித்தாக வேண்டும்” என்று கூப்பாடு போட்டார். -

“நாங்கள் முறைப்படி பதினைந்து நாட்களுக்கு முன்பே பணம் கட்டி இங்கே பந்தல் போட அனுமதி கேட்டு எழுதியிருக்கிறோம். பணத்துக்கு முனிசிபல் ஆபீசு ரசீது இதோ இருக்கிறது” என்று ரசீதை எடுத்துக் காட்டினான் பாண்டியன். அதைக் காண்பித்த பின்னும் நகரசபை அதிகாரி விடவில்லை.

fr - - - - - -

பணம் கட்டியிருக்கலாம். ஆனால் முறைப்படி அனுமதி வழங்கப்படவில்லை.” -

“அனுமதி இல்லையானால் அதையும் உடனே தெரி வித்துப் பணத்தைத் திருப்பி அனுப்பியிருக்க வேண்டும். பந்தல் போடுகிறவரை விட்டுவிட்டுக் கடைசி விநாடியில் இப்படி வம்பு செய்வது நியாயமில்லை.”

அந்த முனிசிபல் கமிஷனர் மல்லை இராவணசாமி சொல்லியபடி போலீசாருடன் வந்து நின்று கத்தியதைக் கேட்டு மாணவர்கள் ஆயிரக்கணக்கில் கூடிவிட்டார்கள். நிலைமை வேறு மாதிரி ஆகிவிடும் என்று பயந்து கமிஷனர் அனுமதியை எழுதிக் கொடுத்துவிட்டுப் போய்ச் சேர்ந்தார். அந்த முனிசிபல் கமிஷனரின் நிலைமையைப் பார்த்துப் பாண்டியன் பரிதாபம் கொண்டான். அவர் முதலில் வீறாப்பாக வந்ததையும், அப்புறம் பெருங் கூட்டமாக மாணவர்கள் கூடியதைக் கண்டு மிரண்டு அனுமதி வழங்கிவிட்டுப் போனதையும் கண்டு சிரித்துக் கொண்டே, “மூன்றாந்தரமான அரசாங்கத்தில் அதிகாரி யாக இருப்பதைவிட முதல் தரமான அரசாங்கத்தில் சேவகனாக இருப்பது எவ்வளவோ மேல். பாருங்கள் இந்தக் கமிஷனர் எவ்வளவு தலைக்குனிவோடு திரும்பிப் போக நேரிட்டிருக்கிறது!” என்றான் பாண்டியன். மற்ற மாணவர்கள் அதைக் கேட்டுச் சிரித்தார்கள்.