பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

400 சத்திய வெள்ளம்

இந்தக் கமிஷனர் நடந்து கொண்டதைப் போலவே மல்லிகைப் பந்தல் ஆர்.டி.ஒ.வும் அதற்கு முந்திய தினம் பாண்டியனைக் கூப்பிட்டு அனுப்பி அசடு வழிந்திருந்தார்! “மிஸ்டர் பாண்டியன்! ஒரு யோசனை. நீங்கள் விரும் பினால் ஏற்கலாம். இல்லாவிட்டால் விட்டுவிடலாம். உங்கள் மகாநாட்டுப் பிரதிநிதிகள் தங்க யூனிவர்ஸிடி ஹாஸ்டல் அறைகள் கிடைக்கவும், மகாநாடு நடைபெற முனிசிபாலிடி ஒத்துழைக்கவும், சுலபமாக ஒரு வழி இருக் கிறது. உங்கள் மகாநாட்டில் அதைத் தொடங்கி வைக்கக் காந்தியப் பெருந்தலைவர் ராமராஜ் அவர்களை நீங்கள் அழைக்கிறீர்கள். அதற்குப் பதில் நம்முடைய கல்வி அமைச்சரையே தொடங்கிவைக்க அழைத்தீர்களானால் உங்களுக்கு ஒர் இடையூறும் இராது. வேண்டிய உதவிகள் ஜாம் ஜாம் என்று உங்களைத் தேடிவரும்.”

“உங்கள் யோசனைக்கு ரொம்ப நன்றி! ஆனால் அதை நாங்கள் ஏற்பதற்கு இல்லை என்பதை வருத்தத் தோடு அமைச்சருக்குத் தெரிவித்து விடுங்கள்! இடை யூறுகளைச் சமாளித்து மகாநாட்டை எப்படி வெற்றி கரமாக நடத்துவது என்பது எங்களுக்குத் தெரியும் சார்!” என்று ஆர்.டி.ஓ.விடம் முகத்தில் அறைந்தாற் போல் மறுத்துவிட்டு வந்தான் பாண்டியன். இதை மண வாளனிடம் போய்ப் பாண்டியன் கூறியபோது, “ஒகோ! அதிகாரிகள் மந்திரிகளின் இரகசிய ஏஜெண்டுகளாக வேறு செயல்படுகிறார்கள் போலிருக்கிறது” என்று சொல்லிச் சிரித்தார் அவர் துணைவேந்தரையும், ஆர்.டி.ஒ.வையும் தூது விட்டுக் கல்வி மந்திரியே அந்த மகாநாட்டில் தாம் இடம் பெற நைப்பாசைப்படுவது மாணவர்களுக்குத் தெரிவிக்கப் பட்டும் அவர்கள் துணிந்து கல்வி மந்திரியைப் புறக்கணித் தார்கள். தொண்டின் சிகரமாகவும் எளிமையின் உருவமா கவும் கல்விக்கண் திறந்த வள்ளலாகவும் இருக்கும் காந்தியப் பெருந்தலைவர் ராம்ராஜ் அவர்களே தங்கள் மகா நாட்டைத் திறந்து வைக்க வேண்டும் என்பதில் மாணவர் கள் பிடிவாதமாக இருந்தார்கள்.