பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/403

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 401

இரண்டு மூன்று தினங்களுக்கு முன்பிருந்தே மல்லி கைப் பந்தல் நகரம் திருவிழாக் கோலம் பூண்டு விட்டது. வீதிகள், தோரணங்களாலும் வரவேற்பு வாசகங்கள் அடங்கிய வளைவுகளாலும் அலங்கரிக்கப்பட்டன. எதற் கெடுத்தாலும் உடனே போஸ்டர் அச்சிட்டு ஒட்டும் இராவணசாமி கட்சியைச் சேர்ந்தவர்கள், மாணவர் என்ற போர்வையில் உயிரைப் பறிக்கும் உலுத்தர் கூட்டத்தின் விழா-பதவி பறிபோன ராமராஜ் தொடங்கிவைக்கிறார். பெருமை பறிபோன பிறரும் கலந்து கொள்கிறார்கள். பாரீர்! பாரீர்!! என்று சுவரொட்டி அச்சிட்டு ஒட்டி யிருந்தார்கள். கீழே இப்படிக்குத் தமிழின மாணவர் முன்னேற்றக் கழகம் என்றும் அந்தச் சுவரொட்டியில் அச்சிட்டிருந்தது. இப்படி ஒவ்வொரு செயல் மூலமும் தங்களுடைய கீழ்த்தரமான போக்கை நிரூபித்துக் கொண்டிருந்தார்கள் மல்லை இராவணசாமியின் கட்சி ஆட்கள். பாண்டியனோ மற்றவர்களோ அத்தகைய கீழ்த்தரமான் எதிர்ப்புக்களை மதித்து அதைப் பெரிதாக் கிப் போரிடாமல் தங்கள் காரியத்தை வெற்றிகரமாக நடத்த வேண்டும் என்று சொல்லி எச்சரித்திருந்தார் மணவாளன். மாணவர்கள் அந்த அறிவுரைக்குக் கட்டுப் பட்டுப் பணியாற்றினார்கள். மகாநாடு மிகச்சிறப்பாக நடந்தது. கடல்போல் மாணவர். பரந்த கூட்டத்தில் மணவாளன் வரவேற்புரை கூறியதைத் தொடர்ந்து காந்தியப் பெருந்தலைவர் ராமராஜ், “நமது பல்கலைக் கழகக் கல்வியில் இன்னும் இந்திய தேசியத் தன்மையின் சாயல்கள்கூட விழவில்லை. நமது பல்கலைக்கழகங்கள் விஞ்ஞானிகளைவிட அதிகமான குமாஸ்தாக்களையும், நிபுணர்களைவிட அதிகமான உத்தியோகஸ்தர்களையுமே தயாரித்து அனுப்புகின்றன. இந்த நிலைமை மாறவேண்டும். பல்கலைக் கழகங்களில் சுதந்திரமாகச் செயலாற்றும் துணைவேந்தர்கள், பேராசிரியர்கள் பணிபுரிய வேண்டும். அரசாங்கத்துக்குத் தலையாட்டுகிற அறிவாளிகளால் பல்கலைக் கழகத்தின் தனித்தன்மை கெட்டுவிடும். மாணவர்களை அரவணைத்துக் கொண்டு வளர்க்கும்

ச.வெ-26