பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/408

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

406 சத்திய வெள்ளம் அந்த ஜீப் வந்ததும் அவசரமாகத் திரும்பியதும் உண்மை” என்றான் பாண்டியன்.

“அது வீண் பிரமை! அப்படி நடந்திருக்கவே முடியாது” என்றார் எஸ்.ஐ. அதைக் கேட்டு ஏற்கெனவே ஆத்திரமாக இருந்த மாணவர்களுக்கு மேலும் கோபம் வந்துவிட்டது. மணவாளனும் அண்ணாச்சியும் தான் மாணவர்களை அமைதியடையச் செய்தனர்.

“கருத்து மாறுபாடு கொள்கிறவர்களையும், விமரிசிப் பவர்களையும் சகித்துக்கொள்ள முடியாதவர்கள் அதிகாரத்தில் இருந்தால் அந்த அதிகாரத்தில் ஜனநாயகத் துக்கு இப்படிப்பட்ட அவமரியாதைகள்தான் நடக்கும். சகிப்புத்தன்மையை ஒரு விரதமாகவும் நோன்பாகவும் கடைப் பிடித்த காந்திஜியின் சிறப்பு சகிப்புத் தன்மையே இல்லாத ஓர் ஆட்சி இங்கே நடக்கிறது. இப்போதுதான் மிக நன்றாகப் புரிகிறது. ஆனால் இவர்களும்கூட காந்தியை வாய்க்கு வாய் போற்றுகிறார்கள்; விழாக் கொண்டாடு கிறார்கள். காந்தியத்தைக் கொன்று கொண்டே காந்திக்கும் விழா எடுப்பது எத்தனை சாதுரியம்!” என்று அண்ணாச்சியை நோக்கி வினவினார் மணவாளன். அண்ணாச்சி இதற்கு மறுமொழி ஒன்றும் கூறவில்லை.

“இந்தக் கொடுமை பொறுக்க முடியாமல்தான் கதிரேசன் போன்றவர்கள் வன்முறையில் நம்பிக்கை வைத்து அந்த வழிக்குப் போனார்கள். கெஞ்சிப் பல்லைக் காட்டி வேண்டுகிறவர்களைக் கயவர்கள் சிறிதும் மதிப்ப தில்லை. அவர்கள் பல்லை உடைப்பவர்களிடம்தான் பயந்து வழிக்கு வருகிறார்கள்” என்று உணர்ச்சி வசப் பட்டுச் சொன்னான் பாண்டியனின் அறை நண்பன் பொன்னையா. ஆத்திரத்தில் அவன் வெறிகொண்டு கூப்பாடு போட்டான். -

இரவு ஒன்பது மணி வரையில் ஜெகஜ்ஜோதியாக இருந்த மகாநாட்டுப் பந்தல் புகையுடனும், தீ நெடியுடனும், பத்தரை, மணிக்குத் தரை மட்டமாகியிருந்தது. மாணவர் கூட்டம் கட்டுக்கடங்காத கோபத்தோடு எரிந்த பந்தலுக்கு வெளியே வெறியேறி நின்றது. ஏதோ பெரிய கலவரத்தை