பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/409

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 407

எதிர்பார்ப்பது போல் போலீஸ் லாரிகள் நான்கு பக்கமும் வந்து வளைத்துக் கொண்டு நின்றிருந்தன. மகாநாட்டுத் தினத்தன்று அதைத் தவிர்க்க விரும்பியவர் போல் துணைவேந்தர் வெளியூருக்கு நழுவியிருந்தார். ஆர்.டி.ஓ.வும் பக்கத்து ஊரில் முகாம் செய்திருந்தார்.

நடந்ததை உள்ளது உள்ளபடியே பத்திகைகளுக்குத் தந்தி மூலமும், தொலைபேசி மூலமும் தெரிவித்தார்கள் மாணவர்கள். எவ்வளவோ முயன்றும் மகாநாட்டு வசூல் பணத்தில் ஒரு பகுதியும், வாடகைக்கு வாங்கிப் போட்டி ருந்த நாற்காலிகள் ஜமுக்காளங்களும் மின்சாரச் சாதனங் கள் சிலவும் தீயில் போய்விட்டன. உடனே பழிக்குப் பழி வாங்கும் சினத்தோடு இருந்த மாணவர்களை அமைதி அடையச் செய்து கலைத்து அவரவர் தங்கியிருந்த இடங் களுக்கு அனுப்பி வைப்பற்குப் பாண்டியனும், மணவாள னும், அண்ணாச்சியும் பெருமுயற்சி எடுத்துக் கொண் டனர். முதலில் மாணவிகளை விடுதிக்கு அனுப்பி வைத்தார்கள். பின்பு மாணவர்களை அனுப்பி மற்ற வேலைகளை யெல்லாம் முடித்துவிட்டுப் பாண்டியன் அண்ணாச்சி முதலியவர்கள் படுக்கச் செல்லும்போது பின்னிரவில் நான்கு மணி ஆகிவிட்டது. தீப்பிடித்த கொடுமையால் பாதிச் சாப்பாட்டில் எழுந்து வந்த சாரணர்களும், ஊழியர்களும் மேலே சாப்பிடாததால் அரை வயிற்றுப் பட்டினியோடு போய்ப் படுக்க நேர்ந்தது. மறுநாள் விடிந்ததும் முதல் வேலையாக மகாநாட்டுக் கென்று அகில இந்தியாவிலுமிருந்து வந்திருந்த வெளியூர்ப் பிரதிநிதிகளை வழியனுப்பி வைக்கும் வேலையில் ஈடுபட்டார்கள். விருந்தினர்களுக்கு முன் தங்கள் மனத் தாங்கல்களைப் பெரிதுபடுத்த விரும்பாமல் அடக்கமா கவும், அமைதியாகவும் நடந்து கொண்டார்கள் அவர்கள். எரிகிற தீயில் எண்ணெயை வார்ப்பது போல் மறுநாள் காலை வெளியான ஆளும் கட்சிப் பத்திரிகைகளில் எல்லாம், “மகாநாட்டுப் பந்தலுக்குத் தாங்களே தீ வைத்து விட்டுப் பிறர் தலையில் பழிபோட முயற்சி! நக்ஸலைட்டு களின் நாச வேலை என்பது போல் திரித்து வெளியிடப்