பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 39

மாணவர்களின் ஆர்வத்தையும் கூட்டத்தையும் பார்த்தால் பாண்டியனும் மோகன்தாஸும் அமோகமாக வெற்றி அடைந்து விடுவார்கள் என்று தெரிந்தது.

“இந்தத் தேர்தலே நடக்கவிடாமல் பண்ணினாலும் பண்ணுவேனே ஒழிய அந்தப் பயல்களை ஜெயிக்கவிட மாட்டேன்” என்று அன்பரசன் கறுவிக் கொண்டிருப்ப தாகப் பாண்டியன் காதுக்குத் தகவல் எட்டியது. முதலில் இது சும்மா வேடிக்கைக்காகச் சொல்லப்படுகிறது என்று தான் பாண்டியனும் மோகன்தாஸும் நினைத்தார்கள். ஆனால் திங்கள் கிழமை மாலையில் அவர்கள் அண்ணாச்சி கடைக்குப் போனபோது அண்ணாச்சியே அதை உறுதிப் படுத்தினார்.

“தம்பீ! கோட்டச் செயலாளர் மினிஸ்டருக்கு ஃபோன் பண்ணி மினிஸ்டர் லெவல்லே வி.சி.க்குப் பிரஷர் கொடுக்கிறாங்க. தேர்தல் நடந்தால் பல்கலைக் கழக எல்லையிலே அமைதியும் ஒழுங்கும் குலையும்னு காரணம் சொல்லித் தேர்தலையே ஒத்திப்போட ஏற்பாடு நடக்குது.” “சும்மா இது ஒரு ரூமரா? அல்லது நம்பலாமா? இது உங்களுக்கு எப்படித் தெரிஞ்சுது அண்ணாச்சி’

அண்ணாச்சி சுற்று முற்றும் பார்த்துவிட்டுத் தணிந்த குரலில் அவனுக்கு மறுமொழி சொன்னார்:

“மந்திரி வி.சி.கிட்டவும், ஆர்.டி.ஓ. கிட்டவும் பேசின. தைக் கேட்ட ஒருத்தரே வந்து சொன்னாரு டெலிபோன் எக்சேஞ்சிலே நம்ம ஆளுங்க நிறைய இருக்காங்க தம்பீ! ஆனா இதை நீங்க உங்களுக்குத் தெரிஞ்சதா வெளியிலே காட்டிக்கிட வேண்டாம். அவுங்க வாயாலேயே வரட்டும். அப்புறம் பார்த்துக்கலாம்.”

“இந்த வி.சி. கோட்டச் செயலாளருக்கே நடுங்குவார்! மந்திரியே ஃபோன் பண்ணிவிட்டால் கேட்கணுமா?” என்று கொதிப்போடு சொன்னான் மோகன் தாஸ்.

“இன்னிக்குச் சாயங்காலம் கண்ணு வரேன்னிச்சு. இன்னும் காணலியே?” என்று பாண்டியனைப் பார்த்துச் சொன்னார் அண்ணாச்சி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_வெள்ளம்.pdf/41&oldid=609788" இலிருந்து மீள்விக்கப்பட்டது