பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/412

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

410 சத்திய வெள்ளம்

மத்ததையெல்லாம் வித்துப்புட்டேன். அந்தப் பணம்தான் இது.”

“ஏன் அப்பிடிச் செஞ்சீங்க?... நீங்க செஞ்சது கொடஞ்சங் கூட நல்லாயில்லே, அண்ணாச்சி.”

“இந்தச் சைக்கிள் எல்லாமே நீங்களும் மத்த மாணவர் களும் வசூல் பண்ணி வாங்கிக் கொடுத்ததுதானே? உங்களுக்கு இல்லாமே எனக்கு எதுக்குங்க? நான் என்ன இதைத் தலையிலியா கட்டிக்கிட்டுப் போகப் போறேன்?” “கடை நடக்கனுமே...? அதுக்கு இனிமே என்ன செய்வீங்க...?”

“பேப்பர் ஏஜன்ஸி, பெட்டிக்கடை வியாபாரம் போதுங்க. சைக்கிள் வாடகைக்கு விட்டுக் காசுவாங்கறது ரொம்பத் தொல்லையாயிருக்கு. அதை இதோட நிறுத்திட லாம்னே முடிவு பண்ணிட்டேன்.”

“மாணவர்களுக்காக நீங்கள் எவ்வளவோ செய்யlங்க உங்களுக்கு நாங்க என்ன நன்றி சொல்றதுன்னே தெரியலே அண்ணாச்சி!”

“போதும்! மேலே நடக்க வேண்டியதைக் கவனியுங் கள். நன்றி, கைம்மாறுன்னெல்லாம் உபசார வார்த்தை களைச் சொல்லி என்னைப்போல ஒரு தொண்டனை அவமானப் படுத்தாதீங்க. நான் அதை எல்லாம் எதிர் பார்க்கிறவன் இல்லே.”

நன்றியின் முழுக் கனிவும் தெரிய அங்கே கூடியிருந்த மாணவர்களும் மணவாளனும் அண்ணாச்சியை ஏறிட்டுப் பார்த்தார்கள். வாசலில் சார் தந்தி!’ என்று தந்திச் சேவகனின் குரல் கேட்டது. அண்ணாச்சி முன் பக்கம் போய்த் தந்தியை வாங்கிக் கொண்டு வந்து பாண்டி யனிடம் கொடுத்தார். தேசிய மனப்பான்மையுள்ள நடிகர் திலகம் ஒருவர் சென்னையிலிருந்து மாணவர் மகாநாட்டுச் செலவுகளுக்காகவும் தீப்பற்றி நேர்ந்த இழப்புகளுக்காகவும் வருந்தித் தம்முடைய நன்கொடையாக ஐயாயிரம் ரூபாய்க் குச் செக் அனுப்பியிருப்பதாகத் தந்தி மூலம் குறிப்பிட்டி ருந்தார். அந்த நடிகருடைய பெயரில் இயங்கி வந்த