பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/413

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 411

மல்லிகைப் பந்தல் இரசிகர் மன்றம் மகாநாட்டு ஏற்பாடு களில் பெரிதும் ஒத்துழைத்திருந்தது. அந்த இரசிகர் மன்றத் தைச் சேர்ந்த யாரோ ஒருவர் ஃபோன் செய்து தகவல் தெரிவித்திருந்ததால் இந்த நன்கொடையை நடிகர் திலகம் அனுப்பியிருக்க வேண்டும் என்று புரிந்தது. என்ன நன் கொடைகள் வந்தாலும் அப்போது அவர்கள் சேர்த்தாக வேண்டிய தொகை இன்னும் எட்டாத உயரத்திலேயே இருந்தது.

இப்படி மாணவர்களின் செயற்குழுக் கூட்டம் நடந்து கொண்டிருந்தபோதே, யாரும் எதிர்பாராத விதமாகப் பொருளாதாரப் பேராசிரியர் பூதலிங்கம் திடீரென்று அண்ணாச்சிக் கடையைத் தேடிக் கொண்டு வந்தார். மாணவர்கள் வியப்புடன் எழுந்து நின்று அவரை மிகவும் மரியாதையாக வரவேற்றார்கள். -

அங்கே சிறிது நேரம் அமைதியாக உடனமர்ந்து அவர்கள் செயற்குழுவின் நடவடிக்கைகளைக் கவனித்த பூதலிங்கம் இருந்தாற் போலிருந்து, “பாண்டியன்! ஐ நோ யுவர் டிஃபிகல்டீஸ். பிளீஸ் அக்ஃஸெப்ட் மை ஹம்பிள் டொனேஷன்” என்று மிகவும் அடக்கமாய்ப் பையில் தயாராக எழுதி எடுத்து வைத்திருந்த ஐந்நூறு ரூபாய்க் கான செக்’ ஒன்றை எடுத்து நீட்டினார். பாண்டியன் அதை வாங்கத் தயங்கினான். அவன் கையில் அதை வற் புறுத்தித் திணித்தார் பேராசிரியர், மணவாளன் உடனே அவரைக் கேட்டார். “புரொபசர் சார், இது எங்கள் கஷ்டம்! இதில் நீங்களும் கலந்துகொண்டு சிரமப்படுவது அவசியம்தானா?” - - -

“உங்கள் கஷ்டத்தில் எனக்கும் பங்கு உண்டென்று நான் நினைப்பது தவறில்லையே மிஸ்டர் மணவாளன்?”

“நீங்கள் எல்லாம் மாணவர்கள்மேல் இப்படி உயிரை வைத்திருக்கிறீர்கள் சார்! உங்களைப் பார்க்கும் போதெல் லாம் எங்களுக்குப் பெருமையாக இருக்கிறது. ஆனால் நம்ம வி.ஸி. மாணவர்களை எல்லாமே தம் எதிரிகளாக நினைக்கிறார்.” -