பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/414

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

412 சத்திய வெள்ளம்

“விட்டுத் தள்ளுங்கள்! இந்த நல்ல வேளையில் அவரைப் பற்றிப் பேசாதீர்கள். என்னைப் பொறுத்த வரையில் அவரை நான் மதிப்பதே இல்லை. அவரைவிட இந்த அண்ணாச்சியை நான் அதிகம் மதிக்கிறேன். டு பீ வெரி பிராங்க் வித்யூ இங்கே படிக்கும் மாணவர்களின் நலன்களை அதற்காக மூவாயிரம் ரூபாய் மாதச் சம்பளம் வாங்கும் வி.சி.யை விட எந்தச் சம்பளமும் வாங்காமல் இந்த அண்ணாச்சி நெடுநாட்களாகக் கவனித்து உதவு கிறார். இவரைப் போல சுயநலமில்லாத தொண்டர் களின் முன் நான் வி.சியை என் கால் துரசுக்குக்கூட மதிக்கவில்லை. இங்கே வந்து இந்தக் கடையை வைத்த நாளிலிருந்து மாணவர்களுக்கு இவர் பிரதிபலன் எதிர் பாராமல் செய்திருக்கும் உதவிகளை யாரையும்விட நான் மிக நன்றாக அறிவேன். வலது கை கொடுப்பது இடது கைக்குத் தெரியாமல் உதவிகள் செய்யும் இவர் அன்றி லிருந்து இன்றுவரை கிழிந்த நாலு முழம் கதர் வேட்டியை யும், அரைக் கைக் கதர் சட்டையுமாக ஒரே மாதிரி எளிமையாக இருக்கிறார். வியாபாரத்தில் சம்பாதித்த லாபத்தில் வீடு கட்டிக் கொண்டு வாழ இவருக்குத் தெரியவில்லை. இவருடைய கட்சி பதவியில் இருந்தபோது தம் தியாகங்களை எடுத்துச் சொல்லி இரண்டு பஸ் ரூட்டுக்குப் பெர்மிட் வாங்கிக் கொள்ள இவர் ஆசைப் பட்டுப் பறந்ததில்லை. இவரைப் பார்க்கும் போதெல்லாம் என் சொந்த ஊரான சுசீந்திரம் கோயிலில் இருக்கும் அனுமார் சிலை எனக்கு ஞாபகம் வருவதுண்டு. இவரை அருகில் வைத்துக் கொண்டே இப்படிப் புகழ்வதற்கு எனக்குக் கூச்சமாக இருக்கிறது மிஸ்டர் மணவாளன்! உபதேசம் செய்பவர்களைவிடத் தொண்டு செய்பவர்களே உயர்ந்தவர்கள். உபதேசம் செய்கிறவர்கள் வெறும் ஞானங்களைச் சுமக்கிறார்கள். தொண்டு செய்கிறவர்களே அந்த ஞானங்களைக் கடைப்பிடித்தே விடுகிறார்கள் ! உபதேசிப்பவர்களை விடக் கடைப்பிடிப்பவர்கள் மேலான வர்கள் என்பதற்கு இவர் ஒர் உயர்ந்த அடையாளம்..."