பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/416

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

414 சத்திய வெள்ளம்

“மகாநாட்டுக்குத் தங்கள் கட்சி மந்திரிகள் யாரையும் கூப்பிடவில்லை என்ற கோபத்தினாலும் தங்கள் எதிர் முகாமைச் சேர்ந்தவரும் பதவியில் இல்லாவிட்டாலும் கோடிக்கணக்கான மக்களால் தொழப்படுகிறவருமாகிய பெருந் தலைவர் ராமராஜ் அவர்களைத் தொடக்க உரை ஆற்றக் கூப்பிட்டு விட்டோமே என்ற பொறாமை யினாலும் அவர்கள் இதைச் செய்துவிட்டார்கள். அவர் கள் எவ்வளவு கெட்ட எண்ணம் உள்ளவர்கள் என்பதை இதன் மூலம் நாட்டுக்கு நிரூபித்து விட்டார்கள். அது போதும். நாம் வேறு இதை எதிர்த்து வன்முறைகளில் இறங்க வேண்டாம். ஜீப்பில் செளகரியமாக ஏறி வந்து அடுத்தவர்கள் நடத்தும் மகாநாட்டுப் பந்தலுக்கு நெருப்பு வைக்கிற அளவுக்கும், லாரிகளில் குண்டர்களை ஏற்றி வந்து மற்றவர்களைத் துன்புறுத்தும் அளவுக்கும் வசதிகள் உள்ளவர்களால் நாம் ஆளப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்பது மக்களுக்குப் புரிந்திருக்கிறது. அவர்களை எதிர்ப் பதைவிட ஆக்கப் பூர்வமான வேறு வேலைகள் நமக்கு இருக்கின்றன. இந்த அகில இந்திய மாணவர் மகாநாடு நம்மைப் பெரும் கடனாளி ஆக்கிவிட்டது. அந்தக் கடன் களைத் தீர்க்கும் வேலையே நமக்கு இன்னும் சில வாரங்கள் வரையில் இருக்கும்.”

செயற்குழுக் கூட்டம் முடிந்து எல்லோரும் கலையும் போது, பாண்டியன் கண்ணுக்கிணியாளிடம் பேசத் தனிமை வாய்க்காததால் ஒரு துண்டுத் தாளில், நாளை வெள்ளிக் கிழமை அதிகாலை ஐந்தரை மணியிலிருந்து ஆறு மணிக் குள் ஹாஸ்டல் மைதானத்தில் இருக்கும் பிள்ளையார் கோயிலில் காத்திருப்பேன். சந்திக்கவும். உன்னிடம் ஒரு முக்கியமான காரியம் இருக்கிறது என்று எழுதி மடித்துக் கொடுத்தான். அதைப் படித்துவிட்டு அங்கிருந்து போவ தற்கு முன் வருவதாக சைகை மூலம் தெரிவித்துவிட்டுப் போனாள் அவள். இன்றும் இரண்டு மூன்று நாட்களில் பொங்கல் பண்டிகைக்காக அவள், பாண்டியன், மணவாளன் எல்லோருமே ஊர் திரும்ப இருந்தார்கள். அதற்குள் மகா நாட்டுப் பாக்கிகளையும் கடன்களையும் கொடுத்துவிட்டுப் போகவேண்டும் என்று முடிவு செய்திருந்தார்கள் அவர்கள்.