பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 சத்திய வெள்ளம்

“நான் கூடப் பார்த்து ரெண்டு நாளாச்சு அண் ணாச்சி. அவுங்க ஹாஸ்டல்லே அது நல்லா உழைச்சு நமக்காக ஒருத்தர் விடாமல் ‘கான்வாஸ் பண்ணிச் சொல்லியிருக்குன்னு கேள்விப்பட்டேன்.”

“யாருதான் நல்லாக் கான்வாஸ் பண்ணலே? எட்டா யிரத்துச் சொச்சம் பேருலே ஏழாயிரம் பேர் நமக்கு ஆதரவா இருப்பாங்கங்கிறது உறுதி. யாருமே கான்வாஸ்’ பண்ணாட்டியும் இது உறுதி. ஆனால் பாவிங்க எதுவுமே நடக்காமப் பண்ணிடுவாங்க போலே இருக்கே...? ஒரே அக்ரமமாவில்ல இருக்கு?” என்று அண்ணாச்சி சொல்லிக் கொண்டிருந்த போதே சைக்கிள் கடைக்கு எதிர்ப்புறத்து மருந்துக் கடையிலிருந்து,

“அண்ணாச்சி! ஃபோன் வந்திருக்கு, வாங்க” என்று குரல் கொடுத்தார்கள். அண்ணாச்சி எழுந்து விரைந்தார். “நீ கவலைப்படாதே பாண்டியன்! எது வந்தாலும் ஒரு கை பார்த்துவிடலாம். மாணவர்களை ஏதோ கிள்ளுக் கீரை என்று நினைக்கிறார்கள். தேர்தலை நிறுத்தினால் கூட்ட மாக வி.சி. வீட்டுக்கு ஊர்வலம் போகலாம். அப்புறம் தானே வழிக்கு வருவார்” - என்றான் மோகன்தாஸ்.

“அமைதியாக நடந்து முடிய வேண்டிய விஷயத்தை அவர்களே பெரிதாக்கி விடுவார்கள் போலிருக்கிறது. பல் கலைக்கழகத்தின் அமைதியை நாமாகக் கெடுக்க விரும்ப வில்லை. ஒரு சேலஞ்ச் என்று வந்தால் நாமும் விடக் கூடாது” என்று பாண்டியன் மோகன்தாஸுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருக்கும்போது அண்ணாச்சி திரும்பி வந்தார்.

“பார்த்தீங்களா தம்பீ! நான் சொன்னது சரியாய்ப் போச்சு. கண்ணுஃபோன் பண்ணிச்சு. லேடீஸ் ஹாஸ்டல் லேருந்து ஒரு வாரத்துக்கு யாரும் வெளியே நடமாடக் கூடாதுன்னு நோட்டீஸ் ஒட்டியிருக்காங்களாம். வரமுடி யலே மன்னிச்சுக்குங்கன்னு அந்தத் தங்கச்சி சொல்லுது, தம்பி, பாண்டியன் ! உங்ககிட்டவும் சொல்லச் சொல் லிச்சு.” - மோகன்தாஸ் உடனே சொன்னான்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_வெள்ளம்.pdf/42&oldid=609817" இலிருந்து மீள்விக்கப்பட்டது