பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/420

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

418 சத்திய வெள்ளம்

களுக்குப் பணம் தர முடியாமல் மணவாளன் மிகவும் சிரமப்படுகிறார். பந்தல் எரிந்து போனதால் பந்தல் காரருக்கும், மின்சார காண்ட்ராக்ட் ஆளுக்கும், பர்னிச்சர் விநியோகம் செய்தவர்களுக்கும் நிறையப் பணம் நஷ்ட ஈடு தரவேண்டியதாகிவிட்டது. அண்ணாச்சி சைக்கிள்களை விற்றுப் பணம் கொடுத்திருக்கிறார். பூதலிங்கமும் பணம் கொடுத்திருக்கிறார். நான்கட என் கடிகாரம், மோதிரம் எல்லாவற்றையும் லேக் அவென்யூவிலுள்ள அடகுக் கடையில் வைத்துப் பணம் வாங்கியிருக்கிறேன். நீ இருநூறு ரூபாய் ஏற்கெனவே நன்கொடை கொடுத்திருக்கிறாய். இப்போது இவற்றையும் அடகு வைக்கப் போகிறேன்.”

“நீங்கள் இதை எல்லாம் விற்றே மணவாளனிடம் கொடுத்தாலும் எனக்குச் சம்மதம்தான். நான் நாயினா விடமும் அம்மாவிடமும் ஏதாவது பொய் சொல்லிக் கொள்வேன்.”

“நான் அப்படிச் செய்யமாட்டேன். அடகுதான் வைக்கப்போகிறேன். நானே இதை விரைவில் உன்னிடம் மீட்டுத் தருவேன். அதுவரையில் நீ என்னை மன்னிக்க வேண்டும். நான் இப்படிச் செய்வது சரிதானா என்று எனக்கே தயக்கமாகவும் பயமாகவும்கூட இருக்கிறது.”

“போதும்! வாயை மூடிக் கொள்ளுங்கள். இந்த மன்னிப்பும் புலம்பலும்தான் எனக்குப் பிடிக்கவில்லை, யாரிடம் யார் மன்னிப்புக் கேட்பது? யார் யாரிடம் தயங்குவது?”

“இன்று வெள்ளிக்கிழமை! உன் கைகளில் உள்ள வளைகளைப் பறித்துக் கொண்டு உன்னை வெறும் கைகளோடு அனுப்ப எனக்கு விருப்பமில்லை” என்று கூறிக்கொண்டே தன் பேண்ட் பாக்கெட்டில் கையை விட்டு எதையோ வெளியே எடுத்தான் பாண்டியன்.

“உனக்கு மறந்திருக்காது என்ற நினைக்கிறேன்! நான் மாணவர் பேரவைத் தேர்தலுக்கு நிற்கத் தயங்கியபோது அண்ணாச்சி கடையில் நீ என் முன் கழற்றி வீசிய வளையல்கள் இவை. எப்போது திருப்பித் தர வேண்டு