பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/426

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

424 சத்திய வெள்ளம்

எழுந்தாலும் உடனே அவர்களைச் சாதிப்பேரைச் சொல்லித் திட்டி விடுவதன் மூலம் சாதி பேதம் தான் வளருமே ஒழிய சமத்துவம் வளராது. எல்லாச் சாதி பேதமும் ஒழிய வேண்டும் என்று கூப்பாடு போட்டுக் கொண்டு சிலரைச் சாதிப் பேர் சொல்லி ஞாபகமாக வசைபாடும் நாகரிகமான தந்திரம் மல்லை. இராவணசாமி கட்சிக்குக் கை வந்த கலையாகி இருந்தது. கீழ் சாதிக்காரர் களை உயர்த்துவதாக மேல் சாதிக்காரர்களையும் மேல் சாதிக்காரர்களை உயர்த்துவதாகக் கீழ்ச் சாதிக்காரர் களையும் ஏமாற்றி மிரட்டி நடுவே பிழைப்பு நடத் தினார்கள் அவர்கள். பொருளாதாரத் திட்டம் எதுவும் இல்லாமல், இது சாமான்யர்களின் ஆட்சி! இதைக் கவிழ்க்க முயல்வோர் எல்லாம் மேட்டுக் குடியினர் - என்று ஒப்பாரி வைத்தார்கள். அன்று பகலில் கண்ணுக் கினியாளுடன் சென்று லேக் அவென்யூவில் உள்ள சேட் கடையில் அவளது வளைகளையும், மோதிரத்தையும், தங்கச் சங்கிலியையும் அடகு வைத்துப் பாண்டியன் பணம் வாங்கிக் கொண்டு வந்தான். பணத்துடன் அவனும் கண்ணுக் கினியாளும் மணவாளனைப் போய்ப் பார்த்த போது அவரிடம் காலையில் தன் அறையில் மல்லை இராவண சாமி கட்சியினர் போட்டிருந்த துண்டுப் பிரசுரத்தைப் பற்றிச் சொல்லி வருத்தப்பட்டான் பாண்டியன்.

“இது மாதிரி விஷயங்களை இக்னோர் செய்யப் பழகிக்கொள் பாண்டியன்! சாதிகளின் உயிர் போய் விட்டது. சாதிகள் என்றோ செத்துவிட்டன. அவற்றின் பிரேதங்களை வைத்து இங்கே சிலர் பணம் பண்ணு கிறார்கள்! தெருவில் அநாதைப் பிணங்களைக் காட்டி உயிருள்ள பிணங்கள் பணம் சேர்ப்பதை நீ பார்த்த தில்லையா? அப்படித்தான் இதுவும்” என்று ஆறுதல் கூறினார் மணவாளன்.

“சான்றோர்கள் என்று தங்களைக் கருதிக் கொள்ளும் பொழில் வளவனார், பண்புச் செழியனார் போன்ற தமிழாசிரியர்களே மாணவர்களிடையே சுயநலத்துக்காக இந்தச் சாதி பேதங்களைப் பரப்புகிறார்கள்."