பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/427

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 425

“இங்கே வேறு வழியில்லாத காரணங்களால் சிலர் சான்றோர்கள் போல் இருப்பதற்கு நிர்ப்பந்ததிக்கப்பட்டி ருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் உண்மையில் சான்றோர் களாகிவிட மாட்டார்கள். சான்றோர்களாகச் சபிக்கப் பட்டவர்கள் எல்லாம் சான்றோர்கள் ஆக முடியாது பாண்டியன்!”

ஏற்கெனவே திட்டமிட்டபடி அன்று மாலை அவர்கள் மகாநாட்டுப் பந்தலுக்கு எதிரிகள் தீவைத்த வன்முறை யைக் கண்டித்து ஒரு பொதுக் கூட்டம் நடத்தினார்கள். பாதிக் கூட்டம் நடந்து கொண்டிருந்த போதே சரியாகப் பத்து மணியளவில் கூட்டத்துக்கு லைசென்ஸ் கொடுத்த நேரம் முடிந்து விட்டதாகப் போலீஸார் மைக்கை நிறுத்திக் கூட்டத்தை முடிக்கச் சொல்லிவிட்டார்கள். மறுநாள் அதே இடத்தில் மல்லை இராவணசாமி தலைமையில் நடந்த ஒரு கூட்டம் பதினொரு மணிவரை நடந்தபோது மாணவர்கள் போய்க் கூப்பாடு போட்டு எதிர்த்தார்கள். போலீஸார் தர்ம சங்கடமான நிலையில் அந்தக் கூட்டத்தை முடிக்கச் சொல்லியும் இராவணசாமி மறுத்தார். மாணவர்கள் கூப்பாடு போட்டுக் கூட்டத்தை முடிக்கச் செய்துவிட்டார்கள். “ஆளும் கட்சிக் கூட்டமானால் விடிகிற வரை மைக் லைசென்ஸ் உண்டா? உங்கள் கூட்ட மானால் மட்டும் பத்து மணி தான் அதற்கு எல்லையா? இது என்ன நியாயம்?” என்று பாண்டியனே அந்த எஸ்.ஐ.யிடம் கேட்டான். அந்த எஸ்.ஐ. அதற்குப் பதில் சொல்ல முடியாமல் சிரித்து மழுப்பினார்.

“என் கூட்டம் விடிய விடியக் கூட நடக்கும்! நீ யார் அதைக் கேட்க?” என்று சவால் விட்ட மல்லை இரவான சாமியைப் பேச விடாமல் கூப்பாடு போட்டு மாணவர்கள் அந்தக் கூட்டத்தைப் பாதியிலேயே முடித்துவிடச் செய்ததும் அவர் கடுங் கோபத்தோடு கறுவிக் கொண்டு போனார். கூட்டம் நடந்த இடம் அண்ணாச்சிக் கடை வாயிலாக இருந்ததால் அவர்தான் மாணவர்களைத் து.ாண்டியி ருப்பதாகப் புரிந்துகொண்டு இராவணசாமியின் ஆட்கள் தங்கள் கூட்டத்தை முடிக்குமுன், “இங்கே சில சைக்கிள்