பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/429

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 427

கவனியுங்கள்” என்று முகத்தில் மலர்ச்சியுடனும், புன்ன கையுடனும் அவன் முன்பு கேட்ட அந்தக் கேள்விக்குப் பதில் சொன்னாள் அவள். அவளை வழியனுப்பிவிட்டு மல்லிகைப்பந்தல் பஸ் நிலையத்திலிருந்து அப்படியே மணவாளன் தங்கியிருந்த ஹோட்டலுக்குப் போனான் பாண்டியன். மணவாளன் அறையில் இருந்தார். அவன் போன போதுதான் யாருடனோ ஃபோனில் பேசி முடித்து விட்டுத் தலைநிமிர்ந்த மணவாளன் பாண்டியனைப் பார்த்ததும், ரொம்பச் சரியான நேரத்தில்தான் நீயும் இங்கே வந்திருக்கிறாய்! இன்னும் சிறிது நேரத்தில் பல்கலைக் கழக சிண்டிகேட் உறுப்பினரும், எஸ்டேட் அதிபரும் ஆகிய ஆனந்தவேலு இங்கே என்னைப் பார்க்க வரப் போவதாக ஃபோன் செய்திருக்கிறார்” என்று கூறியபடி வரவேற்கவே, பாண்டியனுக்கு அந்தச் செய்தி வியப்பை அளித்தது. “ஆனந்தவேலு எதற்காக இங்கே வருகிறார்: அவருக்கு இப்போது இங்கே உங்களிடம் என்ன வேலை?” என்று கேட்டான் பாண்டியன்.

“நீயும் இருந்து வேடிக்கை பார்! அப்போதுதான் உனக்கு எல்லாம் புரியும்! இங்கே மனிதர்கள் எப்படி எப்படி எல்லாம் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள உனக்கு இது ஒரு வாய்ப்பு” என்று சொல்லிச் சிரித்தார் மண வாளன். பாண்டியன் அவர் முகத்தை ஏறிட்டுப் பார்த் தான். அது நிர்மலமாக எப்போதும் போல் தெளிவாக மலர்ந்திருந்தது. அவரே அவனிடம் பேசலானார்:

“இந்த ஆட்சி வந்தபின் பல்கலைக் கழக சிண்டி கேட்டை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறார் ஆனந்த வேலு. இந்தப் பல்கலைக் கழக செனட், சிண்டிகேட் போன்றவற்றைத் தேர்ந்தெடுக்கும் உரிமையும், வோட்டும் தங்களுக்கு உண்டு என்பதை அறியாத காரணத்தால் இந்தப் பல்கலைக் கழகத்தில் படித்து வெளியேறிய பட்டதாரிகள் பலர் தங்கள் பெயரை செனட் வோட்டராகப் பதிவு செய்து கொள்ளவில்லை. தமக்கு வேண்டியவர் களைத் தாமே பணம் கட்டி வோட்டராகப் பதிவுசெய்து தம்முடைய கைப்பாவைகளே செனட் உறுப்பினர்களாக