பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 41

“நீங்க சொன்னது சரிதான் அண்ணாச்சி! ஏதாவது கோளாறுன்னா முதல்லே லேடிஸ் ஹாஸ்டல் நோட்டீஸ் போர்டுலேதான் ரிஜிஸ்ட்ராரோட சுற்றறிக்கையை ஒட்டு வாங்க.”

அப்போது ஒர் ஆள் சைக்கிள் வாடகைக்கு எடுக்க வந்து சேர்ந்தான். குண்டாகவும் குள்ளமாகவும் அந்தக் குறைந்த உயரத்துக்கு ஒரு சிறிதும் பொருந்தாமல் வேஷ்டி யளவுக்கு நீளமாகத் தோளில் தொங்கும் பெரிய துண் டோடும் பார்க்க விநோதமாகத் தோன்றினான் அந்த ஆள். அவன் நடந்து வருவதே உருண்டு வருவது போலிருந்தது. துண்டைப் பார்த்ததுமே அண்ணாச்சி, பாண்டியன், மோகன்தாஸ் மூவரும் ஒருவருக்கொருவர் குறிப்பாக நோக்கிச் சிரித்துக் கொண்டனர்.

“அண்ணாச்சி சைக்கிள் வேணுமே?”

“எங்கே போகனும்? சொல்லுங்க.”

“அதை அவசியம் சொல்லனுமோ?”

“ஆமாம். சொல்லணும். முனிசிபல் எல்லைக்குள்ள தான் சைக்கிள் வாடகைக்குத் தரலாம். நீங்க பாட்டுக்குக் காடு மேடெல்லாம் சுத்தறதுன்னா இங்கே சைக்கிள் கிடைக்காது.”

“நான் கோட்டச் செயலாளருக்குக் கார் வழங்குற நிதி வசூலுக்குப் பொருளாளன். உள்ளூர் முனிசிபல் கவுன்சில் காளிமுத்து.”

“எனக்குத் தெரியும்.”

“தெரிஞ்சுதான் சைக்கிள் தரமாட்டேங்கிறீங்களா?”

“சொந்தமா மோட்டார் சைக்கிளே வைச்சிருக்கீங் களே, ஏன் சைக்கிளுக்கு அலையlங்க..?”

“சைக்கிள் கிடக்கட்டும். சைக்கிள் செயினாவது வாடகைக்குத் தருவீங்களா?” .

“அதுக்கு வேறு இடம் பாருங்க."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_வெள்ளம்.pdf/43&oldid=609850" இலிருந்து மீள்விக்கப்பட்டது