பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/430

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

428 சத்திய வெள்ளம்

வருவதற்கான எல்லாத் தந்திரங்களையும் செய்கிறவர் இந்த ஆனந்தவேலு. இவருடைய சூழ்ச்சியாலும், தந்திரங் களாலும் சுமாரான தகுதியுள்ள பலர் அகடமிக்கவுன்ஸில் உறுப்பினராக நேர்ந்திருக்கிறது. அகடமிக் கவுன்ஸிலும், செனட்டும் மோசமான தரத்துக்கு இருந்தால் சிண்டி கேட்டின் தரமும் மோசமாகவே இருக்கும். சிண்டிகேட்! தரம் குறைந்தாலோ பல்கலைக் கழகத்தின் தரமும் தானாகக் குறையும்” என்று மணவாளன் கூறியபோது ஆனந்தவேலுவைப் பற்றி இவ்வளவு தூரம் தெரிந்து வைத்திருப்பவர் இந்த அதிகாலையில் அவரைச் சந்திப் பதற்கு ஏன் சம்மதித்தார் என்று புரியாமல் மருண்டான் பாண்டியன்.

“அது மட்டுமில்லை! அண்ணனுக்கு இன்னொரு விவரமும் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். தங்களுக்கு வேண்டாத பட்டதாரிகள் அல்லது தங்களுக்கு வோட் போட மாட்டார்கள் என்று இவர்கள் நினைக்கும் பட்ட தாரிகள் செனட் வோட்டராகப் பதிவு செய்து கொள்ள விண்ணப்பம் அனுப்பினால் அந்த விண்ணப்பங்களை எந்தத் தேதிக்குள் வரவு வைத்தால் அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை கிடைக்குமோ, அந்தத் தேதி வரை அவற்றை வரவு வைக்காமல் காலந்தாழ்த்தி வரவு வைத்து அந்த ஆண்டிலேயே அவர்கள் வோட்டளிக்க முடியாமல் யூனிவர்ஸிடி நிர்வாகத்தையும் வி.ஸி.யையும் கைக்குள் போட்டுக் கொண்டு இவர்கள் செய்து விடுவார்கள். வருகிற வோட்டுக்களிலும் வோட்டர் 1 என்ற எண்ணுள்ள வேட்பாளருக்கு வோட் செய்திருந்தால் அதற்குப் பக்கத்தில் அதே மையில் ஒரு 2 ஐயும் சேர்த்து 12 என்ற எண்ணுள்ள வேட்பாளருக்கு அந்த வோட்டை மாற்றி விடுகிற காரியத்தைக் கூடச் செய்து விடுகிறார்கள்.”

“மெத்தப் படித்தவர்கள் நடத்தும் பல்கலைக் கழகத் தேர்தல்களின் லட்சணமே இதுதான் என்றால் அப்புறம் இந்த நாட்டின் பொதுத் தேர்தல்கள் மோசமாக நடப்பதைப் பற்றிக் கேட்பானேன்?"