பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 சத்திய வெள்ளம்

“பார்க்கிறேன்! பார்க்கிறேன்!” என்று கத்திவிட்டுப் போகிற போக்கில் அண்ணாச்சி கடைவாசலில் இருந்த கொடிக்கம்பத்தின்மேல் காறித் துப்பிவிட்டுப் போனான் அந்தக் குண்டன். -

“தம்பீ! ஒரு பெரிய கலகத்துக்கு ஏற்பாடு நடக்குது. ஒற்றுமையாக இருந்து சமாளிக்க வேண்டும்.”

பாண்டியனும், மோகன்தாஸும் அண்ணாச்சியின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தார்கள்.

“இவன் சைக்கிள் கேட்க வரலே, தம்பீ! நம்மை வேவு பார்க்க வந்துவிட்டுப் போறான்.”

அண்ணாச்சியின் அனுமானம் சரி என்றே அவர் களுக்கும் தோன்றியது. வேறு பனியன் போடாத காரணத் தால் பணியனைப்போல் உடம்போடு ஒட்டியதும் சன்னமாயில்லாத முரட்டுக் கதரில் முக்கால் கை வைத்துத் தைத்ததுமாகிய சட்டையைக் கழற்றி எறிந்து விட்டுத் தோளிலும் நெஞ்சிலும் திரண்ட செழுமையான சதைப் பிடிப்புக்கள் மின்ன அண்ணாச்சி பின்பக்கம் சிலம்பக் கூடத்துக்குள் நுழைந்தார்.

“தம்பி! நீங்களும் வாங்க” என்று அவர்களையும் அழைத்தார். பாண்டியனும், மோகன்தாஸாம், பின் பக்கத்து அறையில் சட்டை பனியன்களைக் கழற்றிவிட்டு அண்ணாச்சியோடு உள்ளே சென்றார்கள். ஒர் மணிக்கு மேல் கம்பு சுற்றி விளையாடினார்கள் அவர்கள். அப்போது இன்னும்,சில மாணவர்களும் தனித் தனியாகவும் குழுக் களாகவும் வந்து இவர்களோடு சேர்ந்து கொண்டார்கள். மெல்ல மெல்ல இருட்டிக் கொண்டு வந்தது. சிறிது நேரத்தில் சிலம்பம் முடிந்தது.

மாலை மணி ஆறரை ஆனவுடன் கம்பு சுற்றுவதை விட்டுவிட்டு எல்லாரும் உள்ளே வந்தார்கள். தேர்தல் நிறுத்தப்பட்டு கலகங்கள் நடந்தாலும் நடக்கும் என்ற தன் சந்தேகத்தையும் அது தொடர்பான எச்சரிக்கையையும் மீண்டும் எல்லா மாணவர்களிடமும் தெரிவித்தார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_வெள்ளம்.pdf/44&oldid=609881" இலிருந்து மீள்விக்கப்பட்டது