பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/440

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

438 சத்திய வெள்ளம்

“இட்ஸ் ஆல் தட் தி யூத் கேன் டு ஃபார் தி ஒல்ட்ட்டு ஷாக் தெம் அண்ட் கீப் தெம் அப் டு டேட்” என்று பெர்னார்ட் ஷா கூறியிருப்பதைச் சிரித்துக் கொண்டே சொன்னார் அவர். அதைக் கேட்டு அவர்களும் சிரித்தனர்.

“முதியவர்களுக்கு அதிர்ச்சியளிக்கவும், அவர்களை அப்-டு-டேட்டாக இருக்கச் செய்யவுமாவது எங்களால் முடியும் என்று நீங்கள் கூறுவதைக் கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று மணவாளன் அவருக்கு மறுமொழி கூறினார். பிற்பகல் நான்கு மணி வரை அவர்கள் எல்லாருமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். மாணவர்கள் - கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் பற்றிய பிரச்சினை களே பெரும்பாலும் பேச்சில் இடம் பெற்றன. துணை வேந்தர்களாக வருகிறவர்கள் பதவி நீடிப்பை எண்ணி அரசாங்கங்களின் தாசானுதாசர்களாகி விடுவதைக் கண்டித்தார் அந்த முதியவர்.

நாலரைமணிக்கு மணவாளனின் குடும்பத்தினரிடம் விடை பெற்றுக்கொண்டு அந்த முதியவர் புறப்பட்டுப் போன பின் பாண்டியனும் பஸ் நிலையத்துக்குப் புறப் பட்டான். மணவாளனும் அவரைப் பார்க்க அப்போது தான் வந்த உள்ளூர் மாணவர்கள் சிலரும் இரயில்வே மேம்பாலத்து வழியே வாக்கிங்’ போக இருந்தார்கள். போகிற வழியில் பஸ் நிலையத்தில் பாண்டியனை வழி அனுப்பிவிட்டுப் போனார்கள் அவர்கள். போனதும் ஏறிப் புறப்படுகிறாற்போல் விருதுநகர் பஸ்தான் தயாராயிருந்தது. அசதி காரணமாக பஸ்ஸில் அவன் நன்றாகத் துரங்கி விட்டான். விருதுநகர் வந்ததும் யாரோ எழுப்பினார்கள். இறங்கி பஸ் மாறிக் கிராமத்துக்குப் போய்ச் சேர்ந்தபோது அப்படியும், இப்படியுமாக இரவு எட்டு மணிக்கு மேல் ஆகியிருந்தது. பாலவநத்தம் கிராமம் எட்டு மணி அளவிலேயே உறங்கியிருந்தது. இரவிலும் காலதாமதமாக உறங்கி விடியலிலும் காலதாமதமாக எழும் நகரங்களை விட இரவில் விரைவாக அடங்கி அதி காலையிலும் விரைவாக எழும் இந்தியாவின் கிராமங்கள் பரவாயில்லை என்று பெருமைப்படலாம் போலிருந்தது. அவன் போன