பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/441

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 439

போது வீட்டில் எல்லோரும் உறங்கியிருந்தார்கள். ஆத்தாளை எழுப்பி ஏதோ சாப்பிட்டோம் என்று பேர் பண்ணி முடித்து விட்டு அவனும் படுக்கச் சென்றான். காலையில் அவன் எழுந்திருந்து திண்ணைப் பக்கம் வந்த போது அவனுடைய தந்தையும் பக்கத்து வீட்டுச் சன்னாசித் தேவரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந் தார்கள். “ஏண்டா பொங்கலுக்கு வந்ததுதான் வந்தே, லீவு விட்டதுமே புறப்பட்டு வரப்படாது? கூட ஒரு வாரம் இருக்கலாமே? வேலை மெனக்கெட்டுப் போயி மூணு நாளைக்காகப் பஸ்காரனுக்குப் பணம் செலவழிச்சிருக் கிறாயே!” என்றார் தந்தை. “இந்தக் காலத்துப் புள்ளைங்க அப்பிடியெல்லாம் யோசிக்கிற வழக்கமே கிடையாது சுப்பையாத் தேவரே! ஆயிரம் பத்தாயிரம்னு செலவழிச்சு மகாநாடு அது இதுன்னு போட்டுக்கிட்டிருக்கான் உம்ம பையன்? அவங்கிட்டப் போயிப் பதினைஞ்சு ரூபாய் செலவைப் பெரிசாச் சொல்லி வருத்தப்படlரே நீரு?” என்று குறுக்கிட்டு வம்பு மூட்டினார் சன்னாசித் தேவர். அங்கே மேலும் நின்றால் சன்னாசித் தேவர் ஏதாவது வாயைக் கிண்டுவார் என்று தயங்கிய பாண்டியன் வாயிற் புறத்து வேப்ப மரத்தில் ஒரு குச்சி ஒடித்துக் கொண்டு பல்விளக்கக் கிணற்றடிக்குப் போனான்.

மறுநாள் போகி, அடுத்த நாள் பொங்கல், அதற்கடுத்த நாள் மாட்டுப் பொங்கல். மூன்று நாட்களையும் கழித்து விட்டு எப்போது மறுபடி மதுரை போய்ச் சேருவோம் என்று தவிப்பாயிருந்தது அவனுக்கு. அவன் கொல்லைப் புறம் கிணற்றடிக்குச் சென்றபோது அய்யாவு மாட்டுக் கொட்டத்துக்கு வெள்ளை அடித்துக் கொண்டிருந்தான். பத்து நிமிஷங்களுக்குப் பின் அவன் கிணற்றடியிலிருந்து மீண்டும் வாயிற்புறம் வந்தபோது கிராமத்து இளைஞர்கள் பத்துப் பன்னிரண்டு பேர் அவனைப் பார்ப்பதற்காக வந்து காத்திருந்தார்கள். பாண்டியன் அவர்களை வரவேற்றான். “பாலவநத்தம் இளைஞர் தமிழ் மன்றத்தில் சார்பாகப் பொங்கல் விழா நடத்தவும், ஒரு கவியரங்கம் அமைக்கவும் ஏற்பாடு செய்துகிட்டிருக்கோம்! அண்ணனும்