பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/443

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 441

பாண்டியன். “அதையெல்லாம் பத்தி இப்ப என்ன தம்பீ: நீ அவரைச் சந்திச்சுப் பேசணும்னு நான் ஆசைப்படறேன் அவ்வளவுதான்.”

“சந்திக்கிறதைப் பற்றி ஒண்னுமில்லே. ஆனா அது எதுக்குன்னு தெரியணும்.”

“அதெல்லாம் இப்பக் கேட்காதே, தம்பீ! அவரு நாளன்னைக்குப் பகல்லே இங்கே வாராரு நீ அவரைப் பார்க்கிறே” என்று சொல்லிவிட்டுப் போய் விட்டார் சன்னாசித் தேவர். பாண்டியனுக்கு அந்த விஷயம் பெரும் புதிராயிருந்தது. சந்தேகமாகவும் இருந்தது. சன்னாசித் தேவரின் சார்புகளும் விருப்பு வெறுப்புக்களும் அவனுக்கு நன்கு தெரியுமாகையால் தான் அவன் அதைப் பற்றிச் சந்தேகப்பட்டான். அடுத்த நாள் காலையிலே மறுபடியும் இதை நினைவூட்டினார் சன்னாசித் தேவர். மறுநாள் காலையில் பொங்கல் விழாக் கவியரங்கம் முடிந்து அவன் வீடு திரும்பியதும் தந்தையோடு சேர்ந்து உட்கார்ந்து வீட்டில் பண்டிகைச் சாப்பாடு சாப்பிட்டான். சாப்பிட்டு முடிந்ததும் தந்தையும், வேலையாள் அய்யாவுவும் மாட்டுப் பொங்கலுக்காகக் கொட்டத்தில் உள்ள மாடுகளின் கொம்புகளுக்கு வர்ணம் பூசப் போய்விட்டார்கள்.

“ஐயா வந்திட்டுப் போகச் சொன்னாங்க” என்று அப்போது சன்னாசித் தேவர் மகள் கருப்பாயி வந்து கதவோரமாக நின்று அவனைக் கூப்பிட்டாள்.

“ஏ கருப்பாயி! அதென்ன வாசப் புறமா நின்னே சொல்லிப்பிட்டு ஒடப் பார்க்கிறே? உங்க வீட்டுக்கு வழி அண்ணனுக்குத் தெரியும். நீ உள்ளார வந்திட்டுப் போ!” என்று பாண்டியனின் தங்கை மாரியம்மாள் அவளை உள்ளே கூப்பிட்டாள். தானும் தந்தையும் சாப்பிட்டு முடிந்தபின் தாயும் தங்கையும் சாப்பிடும்போது அருகில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த பாண்டியன் தன்னைத் தான் கருப்பாயி கூப்பிடுகிறாள் என்று தெரிந்ததும், “உண்ட கிறக்கம். கொஞ்சம் தூங்க விடாம நீ கூப்பிட வந்திட்டியாக்கும்?” என்று கேட்டுக் கொண்டே புறப் பட்டான். சன்னாசித் தேவர் வீட்டுக் கூடத்தில் ஆளும்