பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/446

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

444 சத்திய வெள்ளம்

“தம்பி பொருளாதார மாணவராயிருந்தும் உங்களுக்கு இவ்வளவு நல்ல தமிழறிவு இருப்பதை நான் பாராட்டு கிறேன். மிக அருமையாக விவாதிக்கிறீர்கள்.”

“அதெல்லாம் இருக்கட்டும்! என்னைக் கூப்பிட் டனுப்பிய காரியத்தைச் சுருக்கமாகச் சொல்லுங்கள். எனக்கு வேறு வேலை இருக்கிறது. நான் போக வேண்டும்.” -

“பொங்கல் விடுமுறை முடிந்ததும் ஒரு நாள் பல்கலைக் கழகத்துக்குப் போய் அட்டெண்டண்ஸ் கொடுத்துவிட்டு அப்புறம் லீவு எடுத்துக் கொண்டு வந்து விடுங்கள். நீங்கள், நான், தேவர் எல்லாருமாகக் காஷ்மீர் வரை ஓர் உல்லாசப் பயணம் போய் வரலாம்.”

“உங்களை எனக்குப் புரிகிறது, ஆனால்.” “என்ன புரிகிறது அப்படி?” “எல்லாமே நன்றாகப் புரிகிறது! நீங்கள் யாரால் எதற்காக அனுப்பப்பட்டு இங்கே வந்திருக்கிறீர்கள் என்றெல்லாம் புரிகிறது. ஏற்கெனவே பலர் எங்களிடம் இப்படி முயற்சிகளைச் செய்து பார்த்த பின்புதான் நீங்கள் வந்திருக்கிறீர்கள். உங்கள் முயற்சி பலிக்காது. பட்டமளிப்பு விழாவன்று எல்லா மாணவர்களும் மல்லிகைப் பந்தலில் தான் இருப்போம். எங்களுடைய எதிர்ப்பையும் அமைச்சருக்குத் தெரிவிப்போம்.”

“வீண் முரண்டு பிடித்துப் போலீஸ்காரர்களிடமும் எங்கள் கட்சி ஆட்களிடமும் சிக்கித் துன்புறப் போகிறீர்கள்! சுருக்கமாக இவ்வளவுதான் உங்களை எச்சரிக்க முடியும்.” “சுருக்கமாக எச்சரித்தாலும், விரிவாக எச்சரித்தாலும் உங்களுக்கு என் பதில் இதுதான். நீங்கள் எங்களை விலைக்கு வாங்கிவிட நாங்கள் கோழைகள் அல்ல.”

“நீங்கள் என்னோடு இன்றே புறப்பட்டு வந்தால் சென்னையில் அமைச்சர் கரியமாணிக்கத்தையே சந்தித்து இது விஷயமாகப் பேசலாம். அவர் மாணவர்களை உயிரினும் உயிராக மதிக்கிறவர்.”

“அவர் மற்றவர்களை எப்படி மதிக்கிறவர் என்பது எங்களுக்குப் பலமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. நீங்கள்