பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/447

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 445

சொல்லித் தெரிய வேண்டியதில்லை. எங்களில் பலர் அவரால் நிறையத் துன்பங்களை அனுபவித்துவிட்டோம்.” “உங்கள் முடிவான பதில் இதுதானா? இதற்குத்தானா நான் முந்நூற்றைம்பது மைல் பயணம் செய்து ஆவலாக இங்கே ஓடிவந்தேன்?”

“தெரிந்திருந்தால் நானே உங்களை வர வேண்டாம் என்று சொல்லியிருப்பேன். நீங்கள் என்னைப் பார்ப்பதற் காகவே வருவதாகத் தேவரும் என்னிடம் சொல்லவில்லை. சொல்லியிருந்தால் தடுத்திருக்கலாம்.”

அவன் எழுந்திருந்து வெளியே வந்துவிட்டான். சன்னாசித் தேவர் கூடவே வாயில் வரை ஓடி வந்து, “இத்தினி பெரிய மனுசன் காரிலே மெட்ராசிலேயிருந்து புறப்பட்டு வந்திருக்கான். கொஞ்சம் இரக்கம் வேணும் தம்பீ!” என்று கெஞ்சினார். பாண்டியன் நிற்கவில்லை. அவன் தன் வீட்டுக்குள் போய் நுழைந்ததும், “பக்கத்து வீட்டு தேவரு ஏன் கூப்பிட்டாராம்?” என்று கேட்டாள் தாய.

“அது வேறு விஷயம். உனக்குப் புரியாதும்மா!” என்று சுருக்கமாகப் பதில் சொல்லிவிட்டுக் குறுக்கும் நெடுக்கு மாக நடந்தான் அவன். சிறிது நேரம் கழித்து அவனுடைய தந்தையும், சன்னாசித் தேவருமாகச் சேர்ந்து அந்த ஆளும் கட்சிப் பிரமுகருடன் வந்து அவனை மீண்டும் நிர்பந்தப் படுத்தினார்கள். அவன் மசியவில்லை. பொங்கலுக்கு அங்கே வந்திருக்கவே வேண்டாம் என்று அப்போது தோன்றியது அவனுக்கு. மாலையில் விருதுநகருக்குப் போய் அங்கே ஒரு தேசிய நண்பரின் வீட்டிலிருந்து மதுரைக்கு ஃபோன் செய்து மணவாளனிடம் பேசினான் பாண்டியன். மணவாளன் சொன்னார்: “எப்படியாவது பட்டமளிப்பு விழா அமைதியாக நடந்து டாக்டர் பட்டத்தைக் கரகோஷங்களுக்கிடையே வாங்கிவிட வேண்டும் என்ற தவிப்பில் அமைச்சர் கரியமாணிக்கம் நாலாபுறமும் ஆட்களை ஏவியிருக்கிறார். எந்த எல்லை வரை முயல முடியுமோ அந்த எல்லை வரை முயன்று