பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/448

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

446 சத்திய வெள்ளம்

பார்க்கிறார்கள். நீ சீக்கிரம் புறப்பட்டு இங்கே வந்து விடு! கிராமத்தில் இன்னும் யாராவது தேடி வந்து உன்னை வற்புறுத்தவோ, பயமுறுத்தவோ செய்தால்கூட நான் ஆச்சரியப்படமாட்டேன். இனி இங்கே எதுவும் நடக்கும்.”

உடனே அவனும் மறுநாள் மாட்டுப் பொங்கலன்று பகல் சாப்பாட்டை முடித்துக் கொண்டு புறப்பட்டு வந்து விடுவதாக அவரிடம் தெரிவித்துவிட்டு ஃபோனை வைத்தான். ஆனால் மாட்டுப் பொங்கலாகிய மறுநாள் காலையே அவனுக்கு மல்லிகைப் பந்தலிலிருந்து எதிர் பாராத விதமாக ஒரு தந்தி கிடைத்தது. அந்தத் தந்தி மல்லிகைப் பந்தலில் முதல் நாள் இரவு பதினொரு மணிக்குக் கொடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிந்தது. ‘அண்ணாச்சியைப் போலீஸார் கைது செய்திருப்பதாகவும் - அவன் உடனே புறப்பட்டுவரவேண்டும் என்றும் தந்தி வாசகம் இருந்தது. அவன் அந்தத் தந்தியைப் படித்து அதிர்ச்சி அடைந்தான். அவனால் அதை நம்ப முடியாமல் இருந்தது. மாணவர்களிடையே சில வேளைகளில் குறும்புக்காகவும், வம்புக்காகவும் பொய்த் தந்திகள் கொடுத்து அலைக்கழிக்கும் பழக்கம் உண்டு. தமிழ் மன்றத் தி ன் சார் பில் பேச அ ைழ க் கப் படும் ஒரு பேச்சாளரை - அந்தப் பேச்சாளரைப் பிடிக்காத வேறு சில மாணவர்கள், ஃபங்ஷன் போஸ்ட்ஃபோன்டு என்று பொய்த்தந்தி கொடுத்து வரவிடாமல் செய்துவிடுவது போன்ற காரியங்கள் சகஜமாக நடப்பது உண்டு. ஆனால் அண்ணாச்சி விஷயத்தில் அப்படி யாரும் பொய்த் தந்தி கொடுத்திருக்க முடியாது என்பதிலும் பாண்டியன் நம்பிக்கை கொள்ள வேண்டியிருந்தது. தந்தியில் அதைக் கொடுத்தவர் பெயரும் இருந்தது. தேசியத் தோட்டத் தொழிலாளர் யூனியனின் செயலாளர் ஒருவர் தந்தியைக் கொடுத்திருந்ததால் அதை அவ்வளவு சுலபமாகப் புறக் கணித்துவிடவும் முடியவில்லை. ஒருவேளை தோட்டத் தொழிலாளர் யூனியனின் செயலாளருடைய பெயரை வைத்துத் தந்தி கொடுத்தால்தான் நம்பிக்கை இருக்கும்