பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/449

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 447

என்று அவர் பெயரைப் பயன் படுத்தி விஷமிகள் யாராவது பொய்த் தந்தியை கொடுத்திருக்கக் கூடுமோ என்றும் சந்தேகமாயிருந்தது.

“என்னடா அது! என்ன தந்தி?” என்று தந்தியைப் பற்றி விசாரித்தார் அவன் தந்தை. தாயும் அதே கேள்வி யோடு நிலைப்படியருகே வந்து தயங்கி நின்றாள். அவர் களிடம் தந்தியிலிருப்பதைப் அப்படியே கூறாமல், “ஒண்னுமில்லை. ஒரு நெருங்கிய சிநேகிதனுக்கு உடம்பு சொகமில்லே. அதைப் பற்றி வந்திருக்கு. ரொம்ப வேண்டி யவன். நல்லவன், உடனே புறப்பட்டுப் போகணும்” என்று மாற்றிச் சொல்லிவிட்டுப் போகப் புறப்பட்டான் அவன். நல்லவேளையாக அவனுடைய அவசரத்துக்கு ஏற்றாற் போல் விருதுநகரிலிருந்து எக்ஸ்பிரஸ் பஸ்லே கிடைத்த தனால் விரைவாக மதுரைக்குப் போய்ச் சேர்ந்துவிட முடிந்தது. மதுரையை அடைந்ததும் நேரே மணவாளனின் வீட்டுக்குத் தான் போனான் அவன். மணவாளனின் தந்தைதான் வீட்டு முகப்பில் அவன் போனபோது வர வேற்பறையில் அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டி ருந்தார். அவனை வரவேற்று முக மலர்ந்த அவரிடம், தந்தியைக் குறிப்பிட்டு அவன் சொல்லியவுடன்,

“ஆமாம்! அதே தந்தி இங்கேயும் இராத்திரி மூன்று மணிக்கே கிடைச்சு உடனே ஒரு டாக்சி ஏற்பாடு பண்ணிக் கொண்டு மணவாளன் புறப்பட்டுப் போயாச்சே” என்றார் அவர். அவரிடம் சொல்லிக் கொண்டு மல்லிகைப் பந்தலுக்குப் போவதற்காக மீண்டும் பஸ் நிலையத்துக்கே திரும்பினான் பாண்டியன். அப்போதிருந்த கவலையிலும், அவசரத்திலும், பரபரப்பிலும் சித்திரக்காரத் தெருவுக்குச் சென்று கண்ணுக்கினியாளிடம் அந்தத் தகவலைக் கூற வேண்டும் என்று கூட அவனுக்குத் தோன்றவில்லை. எப்படியும் இயல்பாகவே அவள் இன்னும் இரண்டு நாட்களில் யூனிவர்ஸிடி திறக்கிற தினத்தன்று மல்லிகைப் பந்தலுக்கு வந்துவிடுவாள் என்பதனால் அவன் மட்டும் அன்றைக்கு அவசரமாகப் புறப்பட்டான். -