பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 43

அண்ணாச்சி. சில மாணவர்கள் உடனே உணர்ச்சிவசப் பட்டு ஆத்திரமடைந்தார்கள். சிலர் தாங்கள் மேல் கொண்டு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றிச் சிந்திக்கத் தொடங்கினார்கள். செய்தியை எப்படி யும் எல்லாப் பிரிவு மாணவர்களுக்கும், எல்லா விடுதி களுக்கும் தெரிவித்து வைத்து முன்னெச்சரிக்கையாக இருப்பது என்று பேசிவைத்துக் கொண்டார்கள் அவர்கள். அவர்களில் ஒருவன் சிறிது சோர்வோடு,

“இந்த வம்பை எல்லாம் பார்த்தால் பேசாமல் படிப்பு உண்டு நாம் உண்டு என்று இருந்துவிடலாம் போல் தோன்றுகிறது. மாணவர் பேரவைக்கு யார் வந்தால் நமக்கு என்ன?” என்று அலுத்துக் கொள்ளத் தொடங்கினான். உடனே பாண்டியன் முந்திக் கொண்டு அவனுக்குச் சுடச்சுட பதில் சொன்னான்:

“நேற்றைய மாணவன் ஒருவேளை அப்படி இருந்திருக் கலாம். தன் சொந்த எதிர்காலத்தைப் பற்றி மட்டுமே கவலைப்பட்டிருக்கலாம். ஆனால் இன்றைய மாணவன் அப்படி இருக்க முடியாது. அவன் நாட்டின் எதிர் காலத்தைப் பற்றியும் தன்னைச் சுற்றி இருப்பவர்களைப் பற்றியும்கூடக் கவலைப்பட வேண்டியிருக்கிறது; சிந்திக்க வேண்டியிருக்கிறது. தன் எதிர்காலம் நாட்டின் எதிர் காலத்தையும் அதன் கோடிக்கணக்கான மக்களின் எதிர் காலத்தையும் பொறுத்ததாக இருக்கிறது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.”

“புரிந்து கொள்ள வேண்டியதுதான். ஆனால் நாம் படிக்க வந்திருக்கிறோம். புத்தகங்களால் புரிந்துகொள்ள வேண்டியதை மல்யுத்தம் செய்தா புரிந்துகொள்ள முடியும்?” -

“அவசியம் நேர்ந்தால் அப்படியும்தான் புரிந்து கொள்ள வேண்டியிருக்கும். தோளைவலியுடையதாக்கி உடற்சோர்வும் பிணி பலவும் போக்கி அரிவாளைக் கொண்டு பிளந்தாலும் கட்டுமாறா உடலுறுதி வேண்டும்'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_வெள்ளம்.pdf/45&oldid=609911" இலிருந்து மீள்விக்கப்பட்டது