பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/450

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முப்பத்து ஏழாவது அத்தியாயம்

பல்கலைக் கழக விடுமுறையில் மாணவர்கள் மகாநாடு நடந்து முடிந்தபோதே பொறாமையும் கடுங் கோபமும் அடைந்திருந்த மல்லை இராவணசாமியின் கட்சியினர் பழிவாங்கிவிடத் துடித்துக் கொண்டிருந்தனர். மகாநாட்டுப் பந்தலுக்குத் தீ வைத்த பின்பும் அவர்கள் சினம் ஆற வில்லை. மகாநாடு பிரமாதமாக நடந்து முடிந்த பின்பு தானே பந்தலுக்குத் தீ வைக்க முடிந்தது என்று மனத்தாங் கலுடனும் அதைவிட அதிகமாகப் பழிவாங்கும் சினத்துட னும் காத்திருந்தார்கள் அவர்கள். மல்லை இராவணசாமி கட்சியினரின் எல்லாக் கோபமும், ஆத்திரமும் அண்ணாச்சியின் மேல் திரும்பியிருந்தன. எப்படியாவது அண்ணாச்சியைப் போலீஸ் கேஸ் எதிலாவது மாட்டி வைத்து உள்ளே தள்ளிவிடத் துடித்தார்கள் அவர்கள். மகாநாடு முடிந்து இரண்டு மூன்று நாட்களுக்குப் பின் மணவாளனும், பாண்டியனும்கூட மதுரை சென்றுவிட்ட வுடன் இராவணசாமியின் ஆட்கள் அண்ணாச்சியைப் பழிவாங்கச் சமயம் வாய்த்தது. மேலிடத்திலிருந்து ஏற்பாடு செய்து கதிரேசன் குழுவினரோடு தொடர்பு படுத்திப் பொய்யாக ஏதோ குற்றம் சாட்டிப் பொங்கல் பண்டிகை தினத்தன்று மாலை அண்ணாச்சியைக் கைது செய்து ரிமாண்டில் வைத்திருந்தார்கள் போலீஸார். அமைச்சர் கரியமாணிக்கம் டாக்டர் விருது பெறுகிற பட்டமளிப்பு விழா வருவதற்கு முன்னரே முக்கியமானவர்களை யெல்லாம் இப்படிக் கைது செய்து உள்ளே தள்ளிவிட ஏற்பாட்டின் முதற்படியாக அண்ணாச்சியை உள்ளே தள்ளியிருந்தார்கள். முதலில் பூதலிங்கத்துக்குத்தான் அண்ணாச்சி கைதான செய்தி தெரிந்தது. அவரே தந்தி கொடுத்து மணவாளனையும், பாண்டியனையும் வரவழைப்பதற்காக மல்லிகைப் பந்தல் தந்தி அலுவல கத்துக்குப் போனபோது அங்கே தமக்கு முன்பாகவே தேசியத் தோட்டத் தொழிலாளர் யூனியன் செயலாளர் தந்தி கொடுக்க ஏற்பாடுகள் செய்து கொண்டிருப்பதைப் பார்த்து யாராவது ஒருவர் தந்தி கொடுத்தால் போதும் என்ற எண்ணத்தில் தாம் தந்தி கொடுப்பதை நிறுத்திக்