பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/451

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 449

கொண்டார். பூதலிங்கமும் தேசியத் தோட்டத் தொழிலாளர் யூனியன் செயலாளரும் தந்தி அலுவலகத் திலிருந்து திரும்பும்போது காரணமில்லாமல் சும்மா மிரட்டுவதையே நோக்கமாகக் கொண்டு அண்ணாச் சியைக் கைது செய்திருப்பது பற்றி வருத்தப்பட்டுப் பேசிக் கொண்டே ஒரு வக்கீல் வீட்டுக்குப் போய் அண்ணாச் சியை ஜாமீனில் விடுவிப்பது பற்றிக் கலந்தாலோசித் தார்கள். வக்கீல் விடிந்ததும் அந்த முயற்சியைச் செய்து பார்க்கலாம் என்றார்.

மறுநாள் காலையில் விடிந்ததும் எட்டு எட்டரை மணிக்கு மணவாளன் மல்லிகைப் பந்தலுக்கு வந்து சேர்ந்துவிட்டார். அண்ணாச்சி கைதானது பற்றிய விவரத் தைத் தமக்குத் தந்தி மூலம் அறிவித்திருந்த தொழிலாளர் யூனியன் செயலாளரையே முதலில் தேடிச் சென்றார் மணவாளன். அவர் தேடிச் சென்றபோது யூனியன் செயலாளர் வக்கீல் வீட்டுக்குப் புறப்பட்டுக் கொண்டி ருந்தார். மணவாளனும் அவரோடு சேர்ந்து பேசிக் கொண்டே போக வேண்டியதாயிற்று. இவர்கள் இருவரும் வக்கீல் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தபோது அங்கே ஏற்கெனவே பூதலிங்கம் வந்து காத்துக் கொண்டிருந்தார். மன வாளனைச் சந்தித்ததும் பூதலிங்கம் நடந்ததைச் சொல்லி வருத்தப்பட்டார். “என்ன காரணத்துக்காக அரெஸ்ட் பண்ணினாங்க? கிரவுண்ட்ஸ் என்னென்னே தெரிஞ்சிக்க முடியலே. சும்மா மிரட்டி வைக்கணும், அலைக்கழிக் கணும் என்கிறதுக்காகவே கூட அரெஸ்ட் பண்ணியிருப் பாங்க போல இருக்கு” என்றார் வக்கீல். போலீஸாரின் போக்கைப் பார்த்தால் பெயில் கிடைக்குமா கிடைக்காதா என்பதே சந்தேகமாக இருந்தது. ரிமாண்டில் இருப்பவரைக் காணவும் பேசவும் கூட அனுமதி பெற முடியவில்லை. இதற்குள் அண்ணாச்சி கைதான செய்தி மெல்ல மெல்லப் பரவி உள்ளூர் மாணவர்களும், அக்கம் பக்கத்து ஊர் மாணவர்களும், விடுமுறைக்கு எங்கும் போகாமல் தங்கிவிட்ட மாணவர்களுமாக நானூறு, ஐந்நூறு பேர் கடை வாசலில் கூடிவிட்டார்கள். மாணவர்களைத் தவிர தேசியத் தொண்டர்களும் ஊழியர்களும் வேறு கூடியி

ச.வெ.29