பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/452

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

450 சத்திய வெள்ளம்

ருந்தார்கள். அண்ணாச்சி கைதான செய்தி அவர்கள் அனைவரையும் கொதிப்படையச் செய்திருந்தது. இப்படிக் கூட்டம் கூடும் என்பதை எதிர் பார்த்தே வந்து நிற்பதுபோல் அண்ணாச்சிக் கடை வாசலில் இரண்டு லாரி போலீசும் வந்து நின்றது. கடைப் பையன்கள் கடையைத் திறந்து வியாபாரத்தை நடத்திக் கொண்டி ருந்தார்கள். காலை பதினொரு மணியளவில் சுமார் மூவாயிரம் பேருக்குமேல் கூடி விடவே, போலீஸார் லாரிகளிலிருந்து இறங்கிவந்து கூட்டத்தைக் கலைந்து போகுமாறு வேண்டினார்கள். கூட்டம் அந்த வேண்டு கோளைப் பொருட்படுத்தாமல் மேலும் மேலும் அதிக மாகி அங்கேயே நின்று கொண்டிருந்தது. பதினொன்றே முக்கால் மணிக்கு மணவாளனும், தொழிலாளர் யூனியன் செயலாளரும் அங்கே வந்தபோது அண்ணாச்சியை ஜாமீனில் விடப் போலீசார் மறுத்து விட்டதாகவும் ரிமாண்டில் இருப்பவரைக் காணவும் அனுமதி கிடைக்க வில்லை என்பதாகவும் தெரிவித்த போது, கூட்டம் கட்டுக்கடங்காமல் கொதிப்படைந்து போலீஸாரிடம் அடக்குமுறையை எதிர்த்துக் கோஷங்களை முழக்க ஆரம்பித்தது. போலீஸார் தடியடிப் பிரயோகம் செய்து கூட்டத்தைக் கலைக்கும் முயற்சியில் இறங்கினார்கள். முன்னறிவிப்பின்றி இது நடக்கவே கூட்டத்தின் கோபம் அதிகமாகியது. அப்போது அந்தப் பாதையாகச் சென்ற மல்லை இராவணசாமியின் பஸ் ஒன்றைக் கல் எறிந்து நிறுத்தினார்கள் அவர்கள். யூனியன் செயலாளரும் மணவாளனும் கூட்டத்தினரை அமைதியாகக் கலைந்துபோகச் சொல்லி வேண்டிக் கொண்டிருந்த போதே போலீஸார் கண்ணிர்ப்புகை பிரயோகத்தில் இறங்கினார்கள். மூன்று ரவுண்டுகள் கண்ணிர்ப்புகைப் பிரயோகம் முடிந்து கூட்டம் கலைந்து தறிகெட்டு ஒடத் தொடங்கியிருந்தபோது கூட்டத்தின் நடுவே சிக்கியிருந்த மல்லை இராவணசாமியின் அந்த பஸ் தீப்பற்றி எரிவதைப் பார்த்தார் மணவாளன். ஆத்திரம் அடைந்த கூட்டத் தினரில் யார் அதைச் செய்தார்கள் என்பதைக் கண்டு