பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/456

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

454 சத்திய வெள்ளம்

அவர்களுடைய பஸ் மல்லிகைப் பந்தன்ல அடையும் போது, பிற்பகல் ஐந்தரை மணியாகிவிட்டது. பஸ் நிலையத்தில் இறங்கியதுமே காலையில் அண்ணாச்சிக் கடை முன்பு நடந்த நிகழ்ச்சிகளும், அவை தொடர்பாக மணவாளனும், தொழிலாளர் யூனியன் காரியதரிசியும் பஸ்ஸுக்கு நெருப்பு வைக்கக் கூட்டத்தினரைத் துாண்டிய தாகப் பொய்க் குற்றம் சாட்டப்பட்டுக் கைதான விவரமும் அவர்களுக்குத் தெரிந்தன. பஸ் நிலையத்திலிருந்து வெளி யேறும் முன்பே நிறைய மாணவர்கள் அவர்களைச் சூழ்ந்து கொண்டுவிட்டார்கள். “நீ உன் தோழி சிவகாமியின் வீட்டிலாவது பத்மாவின் வீட்டிலாவது போய்த் தங்கிக் கொள்! நேரே ஹாஸ்டலுக்குப் போக வேண்டாம். நான் நாளைக் காலையில் உன்னைச் சந்திக்கிறேன்” என்று சொல்லிக் கண்ணுக்கினியாளை ஒரு ரிக்ஷாவில் அனுப்பி விட்டு மாணவ நண்பர்களோடு தோட்டத் தொழிலாளர் யூனியன் மாடிக்குப் போய்க் கலந்தாலோசித்தான் பாண்டியன். யூனியன் கட்டிட வாயிலில் நாலைந்து சி.ஐ.டி.க்கள் இருந்தார்கள். “பஸ் ஸ்டாண்டிலிருந்தே உன்னை சி.ஐ.டி.க்கள் பின் தொடருகிறார்கள்” என்றான் ஒரு மாணவன். “நானோ நீங்களோ கொலை செய்து விட்டோ, அல்லது கொள்ளையடித்துவிட்டோ இங்கே வந்து கூடிப் பேசவில்லையே? நமக்கு ஏன் இவ்வளவு பயப்படுகிறார்கள்?”

“கொலை செய்பவர்கள், கொள்ளையடிப்பவர் களுக்குக்கூட அவர்கள் பயப்படவில்லை. நல்லவர் களுக்குத்தான் அவர்கள் பயப்படுகிறார்கள். ஒரு மந்தையை ஆள்வதுபோல் மக்களை ஆள நினைக்கிறார்கள். அவர்கள். மந்தையில் சேராதவர்களைத் துன்புறுத்த அவர்கள் தயங்கமாட்டார்கள்!”

“அண்ணாச்சியும், மணவாளனும், யூனியன் செயலாளரும் என்ன பாவம் செய்தார்கள்?”

“மந்தையில் சேர மறுத்தார்கள். மந்தைக்கு எதிராகச் செயல்பட்டார்கள். அதுவே போதுமானது.”

“மனிதர்களால் எப்படி வெறும் மந்தையைப்போல் இருக்க முடியும்?”