பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/457

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 455

“இருக்க முடியுமோ முடியாதோ அவர்களுக்கு ஒரு மந்தை வேண்டும். மக்களை மக்களாக நடத்தி ஆள்வதை விட மந்தையாக நடத்தி ஆள்வது ஒருவேளை அவர் களுக்குச் சுலபமாக இருக்கும் போலிருக்கிறது.”

கலந்து பேசியபோது எல்லா மாணவர்களுமே மிகவும் ஆத்திரமாக இருந்தார்கள். அன்றிரவு பாண்டியனும் வேறு நாலைந்து மாணவர்களும் பேராசிரியர் பூதலிங்கத்தைச் சந்திக்கச் சென்றார்கள். அவர் வீட்டு வாசலிலும் கூட சி.ஐ.டி நடமாட்டம் இருந்தது. “நான் முன்பே உன்னிடம் எச்சரித்தது நினைவிருக்கிறதா பாண்டியன்? இப்படி எல்லாம் கொடுமைகள் நடக்கும் என்பதை முன்பே நான் அனுமானித்திருந்தேன். பட்டமளிப்பு விழா நெருங்க நெருங்க இது அதிகமாகுமே ஒழியக் குறையாது. உணர்ச்சி வசப்பட்டு நீயும் உள்ளே போய் மாட்டிக் கொள்ளாதே! கொஞ்சம் சாதுரியமாக நடந்து கொண்டு அண்ணாச்சி யையும் மணவாளனையும், தொழிலாளர் யூனியன் காரிய தரிசியையும் முதலில் விடுதலை செய்யப் பாடுபடலாம் அப்புறம் மற்றதைக் கவனிக்கலாம்” என்றார் அவர். பாண்டியனுக்கும் அவர் சொல்வதுதான் சரி என்று பட்டது. அவரே, “வி.ஸி.யைப் போய்ச் சந்தித்துப் பேசு! ஆத்திரப்படாமல் நடந்து கொள். அவரைப் பார்க்காமல் புறக்கணித்தீர்களாயின் அவரது கோபம் இன்னும் அதிக மாகும். கைது செய்திருப்பவர்களைப் போலீசார் விடுதலை செய்யாவிட்டால் பட்டமளிப்பு விழாவின்போது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் மல்லிகைப் பந்தலுக்குப் புறப்பட்டு வந்து பெரிய அளவில் போராட நேரிடலாம் என்றும் அவரிடம் சொல்லிப் பார். வி.சி.யிடமிருந்து அந்த விஷயம் உடனே அமைச்சர் காது வரையில் போகும். இவர்களை வெளியே விட்டுவிட்டல் பெரிய போராட்டம் இராது, என்பது போல் நீ சாதுரிய மாகப் பேசினால் மறுநாளே விட்டு விடுவார்கள் என்று நினைக்கிறேன். சார்ஜ்வrட் கொடுக்கவோ ருசுப்பிக்கவோ ஒரு குற்றமும் இல்லாமல் இவர்களை அதிக நாட்கள் லாக்கப்பில் வைத்திருக்க முடியாது. தானாக விட்டு விடுவார்கள் என்றுதான் நாங்கள் கலந்து பேசிய வக்கீல்