பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/458

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

456 சத்திய வெள்ளம்

எங்களிடம் கூறினார். சும்மா மிரட்டுகிறார்கள், இந்த மிரட்டலை மிகவும் கிளெவராகச் சமாளிக்க வேண்டும்” என்று மேலும் கூறினார் பூதலிங்கம். மாணவர்களுக்கு வெளிப்படையாக எந்த உதவியும் செய்ய முடியாமல் இரகசியப் போலீஸார் மூலம் தம்மைக் கண்காணிக்க ஏற்பாடு செய்துவிட்ட வி.ஸி.யின் கொடுமை பற்றியும் அவர் மாணவர்களிடம் வருத்தப்பட்டார். மாணவர் களுக்கு அவர் நிலைமை புரிந்தது. பட்டமளிப்பு விழா நாளன்று எந்தப் போராட்டமுமே நடக்காது’ என்பது போல் துணைவேந்தரே நம்புப்படி ஒரு நாடகம் நடிக்க மனத்துக்குள்ளே ஒத்திகை பார்த்துக் கொண்டு பாண்டியன் நண்பர்களோடு அன்றிரவே துணைவேந்தர் மாளிகையில் போய் அவரைச் சந்தித்தான்.

“பீஸ்ஃபுல்லா இருந்து பட்டமளிப்பு விழா நல்லா நடக்க ஒத்துழைக்கணும்னு நீங்களே பல தடவை சொல்லி யிருக்கீங்க சார்! இப்ப அதை மறந்து செயல்பட நாங்களும் தயாராயில்லை. நீங்களும் தயாராயிருக்க மாட்டிங்கன்னு எனக்குத் தெரியும். அண்ணாச்சியைக் கைது செய்தது, மணவாளனையும், தொழிலாளர் யூனியன் காரியதரிசியை யும் சிறை வைத்திருப்பது எல்லாமாகச் சேர்ந்து மாணவர் கள் மனத்திலே கொதிப்பை உண்டாக்கி யிருக்கிறது, சார்! அவங்களையெல்லாம் நிபந்தனையின்றி ரிலீஸ் பண்ணாட்டி என்னாலேகூட நிலைமையைக் கண்ட்ரோல் பண்ண முடியாது.”

துணைவேந்தர் அவன் முகத்தைக் கூர்ந்து கவனித்தார். அப்புறம் கேட்டார். “ரிலீஸ் பண்ணினால் மட்டும் என்ன ஆகிவிடப் போகுது? மறுபடியும் போராட்டம்னு எல்லா ருமாகச் சேர்ந்து என் பேரைச் சொல்லி ஒழிககோஷம் போட்டுக்கிட்டு நடுரோட்டிலே ஊர்வலம் போவீங்க? அப்படித்தானே?”

“அப்படியில்லே சார்! அவங்களை ரிலீஸ் பண்ணாட்டி இது நாடு தழுவிய பெரிய போராட்டமாகி விடுமோ என்று தான் நான் பயப்படுகிறேன்.”

“நான் எப்பிடி இதிலே தலையிட முடியும்ப்பா? போலீஸ், ஆர்.டி.ஓ. எல்லாருமே பையங்க மேலே ரொம்பக்