பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/459

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 457

கோபமாயிருக்காங்க. சும்மா இருக்காமே பசங்க அந்த இராவணசாமியோட பஸ்ஸுக்கு வேறே நெருப்பு வைச்சி ருக்காங்களே. அதென்ன நியாயம்?”

“பையன்கள் பேரைக் கெடுக்க விஷமிகள் யாராவது அப்படிச் செய்திருக்கலாம் சார்! உங்க ஸ்டுடண்ட் ஆன மிஸ்டர் மணவாளன் எப்படிப்பட்டவர்னு எங்களைவிட உங்களுக்கு நன்ாறகத் தெரியும் சார்! அவர் அப்படி வன்முறைகளைச் சகித்துக் கொள்கிறவர் இல்லை என்பதை நீங்களே மனசாரத் தெரிஞ்சுக்கிட்டிருந்தும் எங்களைக் கேட்கிறீங்களே சார்.”

“இப்ப நான் என்ன பண்ணனும்கிறே நீ? அதைச் சொல்லு.”

அவன் மீண்டும் தன் வேண்டுகோளைச் சொன் னான். வி.சி. வேண்டா வெறுப்பாய் ஆர்.டி.ஒ.வுக்கு ஃபோன் செய்வதற்காக டெலிபோனை எடுத்தார்.

“... பட்டமளிப்பு விழாச் சமயத்திலே பீஸ்ஃபுல்லா இருக்கிறதா அஷ்யூர் பண்றாங்க..” என்றும், “கொஞ்சம் விட்டுப் பிடிக்கலாம்” என்றும் துணைவேந்தர் ஆர்.டி.ஒ. விடம் பேசிய தொனியைக் கேட்ட பின் அவரும் இதில் சர்க்காரின் ஏஜெண்டாக இருப்பது அவர்களுக்குப் பச்சையாகப் புரிந்தது. தங்கள் முன்பு வெளிப்படையாக அவர் ஆர்.டி.ஓ.வுடன் பேசிய பேச்சின் தொனி பாண்டி யனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவனும் உடனிருந்த மற்ற மாணவர்களும் துணைவேந்தரின் சுயரூபத்தை அப்போது நன்றாகப் புரிந்து கொண்டார்கள். பூதலிங்கம் சார் செய்து வைத்திருந்த கணிப்பும் அனுமானமும் நூற்றுக்கு நூறு சதவிகிதம் சரியாயிருந்தது. ஆர்டிஒவிடம் வி.சி. குழைந்த குழைவைப் பார்த்தால் இருவருக்கும் உள்ள நெருக்கத்தை அவர்கள் புரிந்து கொள்ள முடிந்தது. பல்கலைக்கழகம் சம்பந்தமாகப் போலீஸ் எடுக்கும் எந்த நடவடிக்கையும், துணைவேந்தர் கூறும் இரகசிய யோசனை யின் பேரில்தான் நடக்கிறது என்பது அப்போது அவர்கள் கண் முன்பே நிரூபணமா கியிருந்தது. பஸ் நிலையத்தி லிருந்து தன்னைப் பின்தொடரும் சி.ஐ.டி.க்கள், பூதலிங்கம்