பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/464

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

462 சத்திய வெள்ளம்

“நடந்ததைப் பற்றி என்ன? இனி நடக்க வேண்டி யதைப்பற்றிக் கவனிப்போம். இங்கே நியாயங்களை நிலைநாட்ட இன்று தந்திரமும் வேண்டியதாகத்தான் இருக்கிறது. சிங்க வேட்டைக்குத் துணிவு மட்டுமே போதும். நரி வேட்டைக்குத் தந்திரமும் வேண்டும். இன்றுள்ள ஏகாதிபத்திய ஆட்சியை எதிர்த்து நாம் போராடுவது நரி வேட்டையைப் போன்றது பாண்டியன்: இந்த ஆட்சியில் துணைவேந்தர்கள் பல்கலைக்கழகத்தில் ஆளும் கட்சியின் பல்கலைக் கழக கிளைக்குத் தலைவர் கள் போல் செயல்படுகிறார்கள். நீதிபதிகள் ஆளும் கட்சியின் நீதிமன்றக் கிளைத் தலைவர்கள் போல் செயல் படுகிறார்கள். இந்தச் சூழ்நிலையில் தான் நாம் இருக் கிறோம். பட்டமளிப்பு விழாவின் போது நாம் என்ன செய்யப் போகிறோம் என்பது இரகசியமாகவே இருக்க வேண்டியது அவசியம். யாரும் அப்பழுக்குச் சொல்ல முடியாத வெள்ளை வேட்டிகட்டிய துறவியாகிய அண்ணாச்சியையே அவர்கள் கைது செய்து விட்டார்கள். அதை ஏனென்று கேட்க வந்த என்னையும் இதோ இந்தத் தொழிற்சங்கச் செயலாளரையும்கூட உள்ளே தள்ளி விட்டுப் பட்டமளிப்பு விழாவைக் காதும் காதும் வைத்தாற்போல் நடத்திவிட நினைக்கிறார்கள். நாமும் தந்திரமாகவே நடப்போம். எந்தப் போராட்டத்துக்கும் நாம் முயல மட்டோம் என்று வி.சி. நினைக்கும் படி நீ சொல்லிவிட்டு வந்திருப்பது அப்படியே இருக்கட்டும், பாண்டியன்! ஆனால் உண்மையில் முன்பு திட்டமிட்டதை விடப் பெரிதாக நாம் இந்தப் போராட்டத்தை நடத்தப் போகிறோம். இப்போதே அதற்கான ஏற்பாடுகளைத் தொடங்க வேண்டும். இந்தப் பல்கலைக் கழக மாணவர் களைத் தவிர மாநிலம் முழுவதும் பிரதிநிதிகளை அனுப்பி ஒரு கல்லூரிக்கு நூறு பேர் வீதம் திரட்டி மல்லிகைப் பந்தலுக்குப் படை திரண்டு வரச் செய்ய வேண்டும். எல்லோருமே போராட்டத்துக்கு வருவது போல் வரக் கூடாது. தனி பஸ் ஏற்பாடு செய்து கொண்டு மல்லிகைப் பந்தலுக்கு உல்லாசப் பயணம் வருவது போல் தற் செயலாகத் தோன்றும்படி வெளியூர் மாணவர்களை வரச்