பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/469

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 467

மகாத்மா காந்தியின் பெயரை மீண்டும் கேட்டவுடன் அண்ணாச்சிக்குக் கண்கள் கலங்கி நீர் மல்கிவிட்டன. ஒன்றும் பேசத் தோன்றாமல் அப்படியே உட்கார்ந்து விட்டார் அவர். அப்போது உள்ளே வந்த மாணவர் ஒருவர், “பூதலிங்கம் சார் கொடுத்து அனுப்பினாரு” என்று ஒரு கடிதத்தைப் பாண்டியனிடம் கொடுத்தார். பாண்டி யன் கடிதத்தைப் பிரித்துப் படித்துவிட்டு அதை அப்படியே மணவாளனிடம் கொடுத்தான். மணவாளன் படித்து முடித்ததும் அதை அண்ணாச்சியிடம் கொடுத்தார். அண்ணாச்சி படிக்கும்போதே அவர் அருகே அமர்ந் திருந்த கண்ணுக்கினியாளும் அந்தக் கடிதத்தைப் படித்து விட்டாள்.

‘மாணவர் போராட்டம், கிளர்ச்சிகளில் சம்பந்தப் பட்டுத் துரண்டுவதாகக் குற்றம்சாட்டியும், எச்சரித்தும் தமக்குப் பல்கலைக்கழக நிர்வாகம் மெமோ அனுப்பி யிருப்பதாகவும், அதனால் தாம் ஒரளவு கவனமாக ஒதுங்கி இருக்க வேண்டியிருப்பதாகவும் அதற்காகத் தம்மைத் தவறாக எண்ணக்கூடாது’ என்றும் பொருளாதாரப் பேராசிரியர் அக்கடிதத்தில் வேண்டியிருந்தார். பட்ட மளிப்பு விழாவை முன்பு தீர்மானித்திருந்த நாளுக்கும் முன்னதாகவே நடத்தி விடுவதற்கு அமைச்சரும், பல்கலைக் கழக நிர்வாகமும் ஏற்பாடு செய்து வருவதாகவும் மாணவர்கள் ஏதாவது கிளர்ச்சி செய்தால் ஒடுக்குவதற்கு மல்லிகைப் பந்தலில் பல ஊர்களிலிருந்து போலீஸ்காரர் களை வரவழைத்துக் குவிப்பதற்கு அரசாங்கமும், லாரி லாரியாகக் கட்சி அடியாட்களை வரவழைத்துக் குவிப் பதற்கு மல்லை இராவணசாமியும் முயன்று வருவதாகவும் பூதலிங்கம் அந்தக் கடிதத்தில் மேலும் விவரித்திருந்தார். பல்கலைக்கழக எல்லையிலும் நகரிலும் ஏராளமான இரகசியப் போலீஸார் அலைந்து திரிந்து கொண்டி ருப்பதையும் கூறி எச்சரித்திருந்தது பேராசிரியரின் கடிதம்.

பட்டமளிப்பு விழாவுக்கு நாட்கள் மிகவும் குறை வாகவே இருப்பதை உணர்ந்த மணவாளன் விரைந்து செயல்பட வேண்டும் என்பதை எல்லாரிடமும் வற்புறுத்