பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/470

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

468 சத்திய வெள்ளம்

தினார். அங்கே நீராடி உணவருந்த எல்லோருக்கும் முடிந் தவரை வசதி செய்து கொடுத்தார் அண்ணாச்சி. வெளியூர் மாணவர்களை ஒன்று திரட்டுவதற்கு அனுப்ப வேண்டிய மாணவர் பிரதிநிதிகளுக்குத் தொழிலாளர் யூனியன் செயலாளர் மூலம் ஒரு ஜீப் ஏற்பாடு செய்து கொடுத்து அன்று மாலையிலேயே அனுப்பி வைத்தார் மணவாளன். வேறு ஏற்பாடுகளும் அடுத்தடுத்துச் செய்யப்பட்டன. இரகசியங்கள் எதுவும் வெளிப்பட்டு விடாமல் பாது காக்கும்படி மாணவர்கள் கண்டிப்பாகவும் வற்புறுத்தியும் எச்சரிக்கப்பட்டிருந்தனர். எல்லா வேலைகளும் இரகசிய மாகவே நடைபெறலாயின.

அடுத்த நாள் பல்கலைக் கழகம் திறந்தது. வகுப்புக்கள் அமைதியாக நடந்தன. எல்லா மாணவர்களும் பாண்டி யன், கண்ணுக்கினியாள் உட்படத் தங்கள் தங்கள் வகுப்புக்களுக்குப் போனார்கள். துணைவேந்தரே நிலை மையை நோட்டம் விட்டு அறிகிறவர்போல் எல்லாப் பிரிவுகளையும் சுற்றிப் பார்த்தார். அப்படி அவர் சுற்றிப் பார்க்கும்போது அவரோடு பல்கலைக் கழக சிண்டிகேட் உறுப்பினர் ஆனந்தவேலுவும் பதிவாளரும் இராவணசாமி யும், தமிழ்த்துறைத் தலைவர் பொழில்வளவனாரும் உடன் வந்தனர். எல்லாப் பிரிவிலும் வகுப்புக்கள் பரீட்சை நெருங்கு கிறதே என்ற கவலையுடனும், படிப்பில் உள்ள அக்கறை யுடனும் மிகவும் nரியஸ்ஸாக நடப்பதுபோல் தோன்றின. அன்று பிற்பகலில் பாண்டியனையும் மோகன்தாஸையும் ஏனைய மாணவர் பிரதிநிதிகளையும் துணைவேந்தரே தமது அறைக்குக் கூப்பிட்டுப் பாராட்டி நன்றி தெரிவித் தார். பட்டமளிப்பு விழா ஏற்பாடுகளைப் பற்றிச் சொன்னார்: “பட்டமளிப்பு விழாவுக்கு இன்னும் மூன்றே நாட்கள் தான் இருக்கின்றன. கவர்னரும் அமைச்சர் கரியமாணிக்க மும் வருகிறார்கள். கல்வி அமைச்சருடனேயே வேறு சில அமைச்சர்களும் சிறப்பு விருந்தினர்களாக வந்தாலும் வரலாம். முதலில் பட்டம் பெறுகிற மாணவர்களுக்கும், பிஜி, மாணவர்களுக்கும் மட்டுமே கான்வகேஷன் ஹாலில் உட்கார அனுமதியளிப்பது என்று முடிவு செய்திருந்தேன்.