பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/471

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 469

நீங்கள் எல்லோரும் அமைதியாக இருந்து, ஒத்துழைப் பீர்கள் என்று தோன்றுவதால் இப்போது இங்கே படிக்கிற எல்லாப் பிரிவு மாணவ மாணவிகளுக்குமே கான்வ கேஷன் ஹாலுக்குள் வருவதற்குள் பாஸ் தரலாம் என்று ரிஜிஸ்திராரிடம் சொல்லி விட்டேன். காலை பத்து மணிக்குத் தொடங்குகிற பட்டமளிப்பு விழா அநேகமாக ஒரு மணிக் குள் முடிந்து விடும். பிற்பகலில் இந்தப் பல்கலைக் கழகத் தின் பழைய மாணவர் சங்கமும் யூனிவர்ஸிடி ஸ்டாஃப் கவுன்சிலும் சேர்ந்து ஏற்பாடு செய்துள்ள விருந்தில் அமைச்சரும் கவர்னரும் கலந்து கொள்ளப் போகிறார்கள். அமைச்சர் சிறப்புரை ஆற்றப் போகிறார். அதற்கும் நீங்கள் எல்லோரும் பெருந்திரளாக வரவேண்டும். நாளை காலைப் பத்திரிகைகளிலேயே பட்டமளிப்பு விழா அறிவிப்பும் விளம்பரமும் வந்துவிடும்.”

“எங்கள் மேல் நீங்கள் காட்டுகிற அன்புக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை சார்” என்று பாண்டியனை ஒரக் கண்ணால் பார்த்தபடி சிரித்துக் கொண்டே துணைவேந்தருக்கு நன்றி சொன்னான் மோகன்தாஸ், -

“பை நேச்சர் நீங்கள் எல்லாம் ரொம்ப நல்லவர்கள் என்பது எனக்குத் தெரியும் பாண்டியன்! அந்தச் சைக்கிள் கடைக்காரனும் உள்ளூர் பாலிடிவியன்களும்தான் அடிக்கடி உங்களைத் துண்டிவிட்டுக் கெடுத்துடறாங்க, இல்லியா?” .

துணைவேந்தரின் இந்தக் கேள்விக்கு மாணவர்கள் ஒரு பதிலும் சொல்லவில்லை. மெளனமாகத் தங்களுக்குள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

“மாணவர்களாகிய உங்கள் வார்த்தைக்காகத்தான் நான் அந்தச் சைக்கிள் கடை ஆளையும், மற்றவர்களையும் வெளியே விடச் சொல்லி ஆர்.டி.ஒ.வுக்கு ஃபோன் பண்ணினேன். இல்லையானால் பட்டமளிப்பு விழா முடியறவரை விட்டிருக்க மாட்டாங்க. ஐ ஹேட் ஹிம் லைக் எனிதிங். இராவணசாமிக்கு இந்த ஆளையும், உங்க மணவாளனையும், இன்னொரு டிரேட்யூனியன் காரிய