பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/472

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

470 சத்திய வெள்ளம்

தரிசி இருக்கானே - அவன் பேரென்ன ? - அவனையும் அறவ்ே பிடிக்கலை” - என்று துணைவேந்தர் பேசப்பேச அவருடைய சுய ரூபம் தெரியத் தொடங்கியது. தங்கள் தந்திரத்தை அவர் புரிந்து கொள்ளாமல் முழுமையாக நம்பிவிட்டதைப் பார்த்து அவர்மேல் உள்ளுறப் பரிதாபப்பட்டார்கள் அவர்கள்.

“எங்களைப்பற்றிக் கவலைப்படாதீர்கள் சார்! நாங்கள் நியாயமாக நடந்து கொள்வோம். நியாயமும் நேர்மையும் தான் எங்களுக்குப் பெரிது. நீங்களே விரும்பாவிட்டால் கூட நம்முடைய யூனிவர்ஸிடியின் நற்பெயரைக் காப்பாற்ற எதைச் செய்ய வேண்டுமோ அதை நாங்கள் செய்வோம்” என்று கூறிவிட்டு மேலும் அவரோடு பேசிக் கொண்டி ருக்க விருப்பமின்றி விடை பெற்றான் பாண்டியன். மற்ற மாணவர்களும் அவனோடு துணைவேந்தர் அறையி லிருந்து வெளியேறினார்கள்.

வெளியே வந்ததும் ஒரு மாணவன் பாண்டியனின் காதருகே, “அதென்னப்பா வி.சி.யிடம் அப்படி உறுதி மொழி கொடுத்தே? நீங்களே விரும்பாவிட்டாலும் நியாயத்தைக் காப்பாத்துவோம், யூனிவர்ஸிடியின் நற்பெயரைக் காப்பாற்றுவோம்'னா என்ன அர்த்தம்?” என்று கேட்டான். அதற்குப் பாண்டியன்,

“அர்த்தம் எல்லாம் சரியாத்தான் இருக்கு பிரதர்! வி.சி. ஏமாந்தமாதிரி நீயும் ஏமாறதே! என் வார்த்தைகளை நமது நோக்கில் சிந்தித்துப் பார்! அர்த்தம் புரியும். நான் எதிலும் காம்ப்ரமைஸ் செய்து கொள்ளவில்லை என்பதும் புரியும்” என்று சிரித்தபடி பதில் கூறிய பின்பே அந்த மாணவனின் சந்தேகம் தீர்ந்தது.

முப்பத்து ஒன்பதாவது அத்தியாயம்

மாணவர்களைத் துணைவேந்தர் முழுமையாக நம்பி விட்டாற்போல நடந்துகொண்டார் என்றாலும், அமைச்சர் கரிய மாணிக்கமும், சிண்டிகேட் உறுப்பினர் ஆனந்த வேலுவும் மாணவர்களை நம்பவில்லை. எஸ்டேட்