பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/474

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

472 சத்திய வெள்ளம்

களுக்கு எதிரான இவர்கள் ஒடுங்கினாற்போலவும், ஒதுங்கினாற் போலவும், இருந்தாலும் போலீஸுக்கும், பல்கலைக் கழக நிர்வாகத்துக்கும், ஆளும் கட்சிக்கு உளவாளிகளைப் போல் இரகசியமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள். சட்டத்தை மீறிக் கள்ளச் சாராயம் காய்ச்சும் தொழிலில் வேறு இராவணசாமியும், கோட்டம் குருசாமியும் ஈடுபட்டிருந்தார்கள். “எங்க கட்சிக்கு மது விலக்கிலே நம்பிக்கை கிடையாது! எங்க சர்க்கார் சீக்கிரமா அதை எடுத்துப்பிட்டுக் கள்ளுக்கடை, சாராயக் கடைங்களைத் திறந்தாலும் திறந்திடுவாங்க. அதுக்குள்ளே இதிலே நாங்க பணம் பண்ணியாகணும். ஆனா அதுக்குப் பிறகும் அந்தக் கடைக்காரனைவிட அஞ்சு பைசா மலிவுன்னு நாங்க சொல்லிட்டா எங்க சரக்குத்தான் நிறைய விற்கும். எங்களை யாரும் அசைக்க முடியாது” என்று இராவணசாமியே அடிக்கடி மார் தட்டிப் பேசிக்கொள்வது உண்டு. தம் சார்புள்ள மாணவர்களில் பலரைக் குடிக்கவும் பழக்கியிருந்தார் அவர்.

“நான் உள்ளே தண்ணியை ஊத்திக் கையிலே தடியைக் கொடுத்துப் பத்துப் பேரை அனுப்பிச்சா உன் ஆளுங்க ஆயிரம் பேர்கூட எதிரே நிற்க முடியாது. தெரியுமா?” என்று முன்பு ஒரு சமயம் மணவாளனை எதிர்த்துச் சவால் விட்டிருந்தார் இராவணசாமி. இப்போது பாண்டி யன் இருப்பதுபோல் அப்போது மணவாளன் மாணவர் களின் அணியைப் பொறுப்பேற்று நடத்துகிறவராக இருந்தார். அதே போன்ற காரியங்களை இப்போதும் இராவணசாமி செய்யக்கூடும் என்ற முன்னெச்சரிக் கையைப் பாண்டியனிடமும் மற்ற மாணவர்களிடமும் செய்திருந்தார் மணவாளன். எதற்கும் மாணவர்கள் விழிப்பாகவே இருந்தனர்.

பட்டமளிப்பு விழாவுக்கு முந்திய நாள் மாலை தேசியத் தோட்டத் தொழிலாளர் யூனியன் கட்டிட மாடி யில் மாணவர்கள் கூடிப் பேசினார்கள். கூட்டம் இரகசிய மாகவே நடந்தது. இராவணசாமி கட்சியினரைத் தவிர மற்ற எல்லாப் பிரிவு மாணவர்களும் அங்கே வந்திருந்தார் கள். ஆளும் கட்சியின் குமாஸ்தாவைப் போல் செயல்