பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/475

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 473

படும் துணைவேந்தர் மேலும், பல்கலைக் கழக நிர்வாகத் தின் மீதும் மாணவர்கள் கடுங்கோபத்தோடு இருந்தார்கள். போதாக் குறைக்குப் பேராசிரியர் பூரீராமன் தாக்கப் பட்டது தொடர்பாகவும் வேறு சில போராட்டங்கள் தொடர்பாகவும் நடந்த நீதி விசாரணையில் பேராசிரிய ருக்கும் மாணவர்களுக்கும் பாதகமாகவும், அரசாங்கத்துக் குச் சாதகமாகவும் கூறப்பட்ட தீர்ப்பு வேறு அன்றைய காலைத் தினசரிகளில் வெளியாகி மாணவர்களின் கொதிப்பை இன்னும் அதிகமாக்கியிருந்தது. சில மாதங் களுக்கு முன்பு திருமாநல்லுர் என்கிற கிராமத்தில் பத்துப் பன்னிரண்டு விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கும், வேறு இடங்களில் சில மாணவர்கள் போலீஸ் அடக்கு முறைக்குப் பலியானதற்கும் காரணமான அமைச்சர் கரியமாணிக்கத்தை அவருக்கு டாக்டர் பட்டமளிக்கும் போது கடுமையாக எதிர்க்க வேண்டும் என்றார்கள் மாணவர்கள். அதில் யாருக்கும் இரண்டாவது அபிப் பிராயமே இல்லை.

“இதில் நாம் பலாத்காரத்தைக் கடைப்பிடித்து அவர்களும் பலாத்காரத்தைக் கடைப்பிடித்தால் அப்புறம் அவர்களிலிருந்து நம்மைத் தனியே உயர்த்திக் கொள்ளவோ, பெருமைப்பட்டுக் கொள்ளவோ எதுவுமில்லை. நமது எதிர்ப்பு அமைதியாக இருக்க வேண்டும். பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழா மண்டப முகப்பிலோ, நிர்வாகக் கட்டிடமாகிய பூபதி ஹால் முகப்பிலோ வழி யில் குறுக்கே படுத்துக்கூட நாம் மறியல் செய்யலாம். யூனிவர்ஸிடி காம்பஸ்-க்குள் அவர்கள் போலீஸைக் கொண்டுவரமாட்டார்கள் என்றும் நினைக்கிறேன்” என்று மணவாளன் கூறியபோது பல மாணவர்கள், “அதெல்லாம் பழைய காலம்! இப்போதெல்லாம் வி.சி.க்குப் பதில் போலீஸார் தான் யூனிவர்ஸிடியையே நடத்துகிறார்கள். மேரி தங்கம் தற்கொலையின்போது ஒருவார காலம் வரை காம்பஸ்-க்குள் போலீஸ்தானே குடியிருந்தது?’ என்று பதிலுக்கு வினவினார்கள்.

“அண்ணன் நினைப்பதுபோல் இவர்களுக்குச் சக்தியாக் கிரஹம் எல்லாம் புரியாது! சத்தியாக்கிரஹத்தைக் கெளர