பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/476

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

474 சத்திய வெள்ளம்

விக்கத் தெரியாத முரடர்களுக்கு முன்னால் சத்தியாக் கிரஹம் நடத்திக்கூடப் பயனில்லை” என்றான் பாண்டியன். பாண்டியனே அப்படிக் கூறியது மணவாளனுக்கு வியப்பு அளித்தது.

“நான் இன்னும் சத்தியாக்கிரஹிதான்! துன்பங்களைத் தாங்கிக்கொண்டு எதிர்ப்பவனின் மன வலிமை எதிரி களைத் தாக்கிவிட்டு எதிர்ப்பவனுக்கு இருக்க முடியாது. என்னால் ஒரு சிலம்பக் கழியைச் சுற்றி நூறு பேரை தாக்கிவிட முடியும் தம்பீ! ஆனால் அதை நான் தவறான முறையில் செய்யமாட்டேன்” என்றார் அண்ணாச்சி.

“அண்ணாச்சியை நாங்க மதிக்கிறோம். ஆனால் தாங்கிக் கொள்ள முடிந்த எல்லையை மீறி நமக்குத் துன்பங்கள் வந்து விட்டன. இனிமேல் தாங்க முடியாது. பொறுமைக்கும் எல்லை உண்டு. இங்கே காஸ்ட்ரோக்கள் தோன்ற வேண்டும். புரட்சியைத் தவிர வேறு வழியே இல்லை. காலம் மாறிவிட்டது. மோசமானவர்களை எதிர்த்துக் கெளரவமான முறையில் போராட முடியாது. தீவிரம் தேவை” என்றார் லெனின் தங்கத்துரை என்ற இடதுசாரி மாணவர். .

“கதிரேசன் தொடங்கியதுதான் சரியான தொடக்கம். நீங்களெல்லாம் அப்போது அதை ஆதரிக்கத் தவறிவிட்டு இப்போது கதறுகிறீர்கள்” என்றார் மேலும் தீவிரமான ஒரு மாணவர். லெனின் தங்கத்துரை பிரிவில் ஒரு குழுவும், இரகசியமாக கதிரேசனை ஆதரிக்கும் மற்றொரு குழுவும் இருப்பதைப் பாண்டியன், மணவாளன் எல்லாருமே அறிந்திருந்தார்கள். இந்த எல்லாப் பிரிவினருமே அண்ணாச்சியை மதித்தனர். அவர் ஒரு தூய காந்தியவாதி என்பதைப் புரிந்து கொண்டிருந்தார்கள். லெனின் தங்கத்துரை பாண்டியனை எத்தனையோ முறை ரீயாக்ஷனரி என்றும் பூர்ஷ்வா என்றும் திட்டியிருக்கிறார். ஆனால் அதே தங்கத்துரை அண்ணாச்சியின் முன்னிலையில் பொட்டிப்பாம்பாய் அடங்கிவிடுவார். பேதா பேதம் பாராமல் எல்லா நல்ல மாணவர்களுக்கும் அண்ணாச்சி செய்திருக்கும் உதவிகள், தொண்டுகள் அனைத்தும்